Published:Updated:

மதுரை: இளம் வயது கனவு... 55 வயதில் நீட் தேர்வெழுத வந்த விவசாயி!

நீட் தேர்வு - ராஜ்யக்கொடி

மதுரையைச் சேர்ந்த 55 வயதான ராஜ்யக்கொடி என்பவர் தேர்வு நீட் தேர்வெழுதியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

மதுரை: இளம் வயது கனவு... 55 வயதில் நீட் தேர்வெழுத வந்த விவசாயி!

மதுரையைச் சேர்ந்த 55 வயதான ராஜ்யக்கொடி என்பவர் தேர்வு நீட் தேர்வெழுதியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நீட் தேர்வு - ராஜ்யக்கொடி

நாடு முழுவதும் இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 18,72,339 பேர் எழுதினார்கள். இதில், மதுரையைச் சேர்ந்த 55 வயதான ராஜ்யக்கொடி என்பவர் தேர்வு நீட் தேர்வெழுதியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

தேர்வு எழுத வந்த மாணவிகள்
தேர்வு எழுத வந்த மாணவிகள்

மதுரையில் அமைந்துள்ள 18 தேர்வு மையங்களில் 8,833 மாணவர்கள் தேர்வெழுதினார்கள். தேர்வெழுத பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் காலையிலிருந்து தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்த ராஜ்யகொடி என்ற 55 வயதான தேர்வர்தான் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

தேர்வு எழுத செல்லும் மாணவிக்கு உணவூட்டும் தாய்
தேர்வு எழுத செல்லும் மாணவிக்கு உணவூட்டும் தாய்

இது குறித்து நம்மிடம் பேசிய அவருக்கு தெரிந்தவர்கள், ``பி.எஸ்.சி படித்துள்ள ராஜ்யக்கொடி விவசாயம் செய்து வருகிறார். அவர் மனைவி தேன்மொழி. இந்தத் தம்பதிக்கு சக்தி பெருமாள், வாசுதேவா என இரு மகன்கள். இதில் வாசுதேவா எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு, கல்லூரி காலத்தில் நிறைவேறாமல் போனதால், தன் மகனை மருத்துவக்கல்வி படிக்க ஊக்குவித்தார். ஆனாலும் அவருக்கு மருத்துவம் பயில வேண்டும் என்ற ஆர்வம் ஓயவில்லை.

பெயர் உள்ளதா என பார்க்கும் மாணவிகள்
பெயர் உள்ளதா என பார்க்கும் மாணவிகள்

இந்த நிலையில்தான், கடந்த சில காலமாக மருத்துவம் சம்பந்தமான நூல்களை படித்து நீட் தேர்வுக்கு தயாராகி தற்போது எழுத வந்துள்ளார்" என்றனர்.

கல்விக்கு வயது தடையில்லை என்பதை ராஜ்யக்கொடி நிரூபித்திருக்கிறார்.