Published:Updated:

தொடர் கனமழை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து!

Vikatan Correspondent
தொடர் கனமழை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து!
தொடர் கனமழை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து!

சென்னை: தொடர் மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

தொடர் கனமழை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து!

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் தொடர் மழை காரணமாக, இன்று முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் டிசம்பர் மாதம் 11-ம் தேதி நடத்தப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளுக்கும், சீர்மிகு சட்டப் பள்ளியிலும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.