Published:Updated:

பிளஸ் டூ தேர்வு: 8.82 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

பிளஸ் டூ தேர்வு: 8.82 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!
பிளஸ் டூ தேர்வு: 8.82 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

சென்னை: தமிழகம் மற்று புதுச்சேரியில் இன்று தொடங்கும் பிளஸ் டூ தேர்வை 106 சிறை கைதிகள் உள்ளிட்ட 8,82,044 மாணவ-மாணவியர்கள் எழுதுகின்றனர்.

பிளஸ் டூ தேர்வு: 8.82 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,550 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளும், 42,347 தனித் தேர்வர்களும் இன்று தொடங்கும் பிளஸ் டூ தேர்வை எழுதுகின்றனர். பிளஸ் டூ தேர்வை, 3,91,806 மாணவர்களும், 4,47,891 மாணவிகளும் எழுதுகின்றனர். இவர்கள் தவிர, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் ஆகிய மத்திய சிறையில் உள்ள 106 சிறை கைதிகளும் தேர்வு எழுத உள்ளனர்.

இந்த ஆண்டு, முதல் முறையாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வை கண்காணிப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தேர்வுகூடங்களை கண்காணிப்பாதற்காக 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் தேர்வுகூடங்களுக்கு அலைபேசியை எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு