Published:Updated:

சென்னை ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வரை சிறைவைத்த மாணவிகள்!

Vikatan Correspondent
சென்னை ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வரை சிறைவைத்த மாணவிகள்!
சென்னை ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வரை சிறைவைத்த மாணவிகள்!

சென்னை நந்தனத்தில் உள்ளது அரசு ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சி கல்லூரி. இங்கு ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக் கல்வி பயின்று வருகின்றனர். சமீப காலமாகவே இங்குள்ள நிர்வாகம் மீது மாணவர்கள் பல குற்றச்சாட்டுகளை சொல்லி வந்தனர். மாணவ, மாணவியரை இழிவு செய்தல், அவர்கள் மீது மனரீதியிலான தாக்குதலில் ஈடுபடுதல், அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளில் பயிற்றுனர் மற்றும் வார்டன்கள் ஈடுபடுதல் போன்றவைகளை தடுத்து நிறுத்தக் கோரி கல்லூரி முதல்வர் கிரேஸ்செரீனாவிடம் புகார் செய்துள்ளனர். ஆனால். இது குறித்து மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

சென்னை ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வரை சிறைவைத்த மாணவிகள்!

இந்த சூழ்நிலையில் கடந்த ஒரே வாரத்தில் இரண்டு மாணவியர் தங்களுடைய சான்றுகளை கல்லூரியில் இருந்து கேட்டு வாங்கிக் கொண்டு கல்வியை தொடராமல் விட்டு விட்டனர் என்று கூறப்படுகிறது. மாணவர்கள் தரப்பில் "நேற்றுமுன்தினம் கூட கல்லூரி வளாகத்திலேயே ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்று அவரை மாணவர்களாகிய நாங்கள் போராடி காப்பாற்றி விட்டோம்" என்கிறார்கள்.

நிலைமை மிகவும் மோசமாக போய்க் கொண்டிருந்த இதுமாதிரியான சூழலில்தான்  மாணவர்கள் இன்று (11-ம் தேதி) காலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தை கையிலெடுத்தனர். மாலை ஏழு மணி வரை போராட்டம் முடிவுக்கு வராததால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண கல்லூரி முதல்வர் கிரேஸ்செரீனா வந்தார். மாணவர்களிடம் பேசிப்பார்த்தார். எந்த முடிவும் மாணவர்களுக்கு திருப்திகரமாக இல்லாததால் அங்கிருந்து புறப்பட முயன்றார்.

ஆனால், மாணவர்கள் அவரை அங்கிருந்து கிளம்புவதற்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் ஏராளமான மாணவர்கள் சூழ் வளையத்தில் கல்லூரி முதல்வர் மூன்று மணிநேரமாக சிறை வைக்கப் பட்டிருக்கிறார்.

-ந.பா.சேதுராமன்