Published:Updated:

பள்ளியில் 23 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 23 இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலானது.

வேலூர் மாவட்டம், ஓட்டேரியில் செவந்த் டே மேல்நிலைப்பள்ளியும், ஆசிரியர் பயிற்சி நிலையமும் அருகருகே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளி வளாகத்தின் முன் பகுதியில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதில் திடீரென்று ஒரு வாகனத்தில் பெட்ரோல் கசிந்து, திடீரென தீ பற்றி வெடித்துள்ளது. இதனையடுத்து, தீ மளமளவென மற்ற வாகனங்களுக்கும் பரவி உள்ளது. இதனையடுத்து விரைந்து வந்த 3 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி. ஆனால் அதற்குள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுள் 23 வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கண்காணிப்பு கேமரா புயலினால் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கண்காணிப்பு கேமராவிலும் தீ விபத்துக்கான காரணத்தை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தீயில் எரிந்து சாம்பலான வாகனங்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பள்ளி வளாகத்தில் தீப்பிடித்ததால் மாணவர்களின் பெற்றோர்களிடையே பதற்றநிலை காணப்பட்டது. தீ விபத்தை அடுத்து, மாணவர்களை அதன் அருகில் செல்ல விடாமல், மாற்றுப்பாதையில் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.