Published:Updated:

கிளியும் நம் நண்பனே !

கிளியும் நம் நண்பனே !

பிரீமியம் ஸ்டோரி
##~##

அஞ்சல் அட்டை அளவுள்ள ஓர் அட்டையை, இரண்டாக வெட்டிக்கொள்ளவும். அதில், ஓர் அட்டையில் கிளியின் படத்தை வரையவும்.

மற்றொரு அட்டையில் கிளிக் கூண்டின் படத்தை வரையவும். (படம் வரையத் தெரியாத மாணவர்கள் கிளி மற்றும் கூண்டின் படத்தை வெட்டி ஒட்டிக்கொள்ளலாம்).

பிறகு, இரண்டு அட்டைகளின் பின் பக்கத்தில் (படம் வரையப்படாத  பக்கத்தில்) பசையைத் தடவி, அட்டைகளைவிட உயரமான குச்சியை அட்டைகளின் நடுவில் வைத்து, இரண்டு அட்டைகளையும் ஒன்றுடன் ஒன்று ஒட்டும்படி செய்யவும். பசை நன்றாகக் காயும்வரை உலரவிடவும்.

குச்சி, அட்டைகளில் இருந்து சற்று நீட்டிக்கொண்டு இருக்க வேண்டும், அப்போதுதான் அதைச் சுழலவைக்க முடியும்.

இரண்டு கைகளுக்கும் இடையில் குச்சியைப் பிடிக்கச் செய்து சுற்ற வேண்டும். வேகமாக சுற்றவைக்கும்போது, கிளி கூண்டுக்குள் இருப்பதுபோல தெரியும்.

கிளியும் நம் நண்பனே !

பறவைகளையும் விலங்குகளையும் அடைத்துவைப்பதால், அவற்றுக்கு ஏற்படும் துன்பங்களை விவாதிக்கச் செய்யலாம். அப்படி விவாதிக்கும்போது, அரிய வகைப் பறவைகள் மற்றும் விலங்குகள் பற்றிச் சொல்லும் மாணவர்களுக்கு மதிப்பீடு அளிக்கலாம்.

வகுப்பு மாணவர் யாராவது காயம்பட்ட பறவை அல்லது விலங்குக்கு உதவி செய்திருந்தால், அந்த அனுபவத்தை மற்றொரு மாணவருடன் சேர்ந்து நாடகம் போல நடிக்கச் செய்யலாம்.

இதன் மூலம், பறவைகள் மற்றும் விலங்குகள் மீது மாணவர்களுக்கு அன்பு ஏற்படும். அவற்றை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்வார்கள்.  

- ஷி.திலீப்,
அ.மே.நி.பள்ளி,  
சத்தியமங்கலம்,
விழுப்புரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு