Published:Updated:

விளையாட்டு முறையில் பயிலுதல்!

விளையாட்டு முறையில் பயிலுதல்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

சிறுசிறு அட்டைகளைத் தயார்செய்யவும். அதில் ஒருபுறம் தனிமங்களின் பெயர்களையும், மறுபுறம் தனிமங்களுக்கு உரிய குறியீடுகளையும் எழுத வேண்டும்.ஒவ்வொரு தனிமத்தின் பெயரும் நான்கு அட்டைத் துண்டுகளில் இருக்கும்படி எழுதிக்கொள்ளவும். இதை ஒரு அட்டைப் பெட்டியில் போட்டுக்கொள்ளவும்.

மாணவர்களை ஐந்து அல்லது பத்து பேர்களைக்கொண்ட இரு குழுக்களாகப் பிரித்து, விளையாடச் செய்யவும்.

ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வந்து பெட்டியில் உள்ள அட்டைத் துண்டுகளில் ஒன்றை, கண்களை மூடிக்கொண்டு எடுக்க வேண்டும். இவ்வாறே இரு குழுக்களிலும் உள்ள அனைவரும் எடுக்க வேண்டும். பிறகு, ஐந்து நிமிடங்களுக்குள் தங்கள் குழுவில் சேகரித்த தனிம அட்டைகளைக்கொண்டு சேர்மங்களை உருவாக்க வேண்டும். சேர்மங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மதிப்பீடு வழங்கப்படும்.

விளையாட்டு முறையில் பயிலுதல்!

அதிக மதிப்பீடு பெற்ற குழு, வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். இந்த விளையாட்டை இரு

விளையாட்டு முறையில் பயிலுதல்!

குழுவினர் விளையாடும்போது, மற்ற மாணவர்கள் பார்வையாளராக இருப்பார்கள். முதல் இரு குழுக்களின் விளையாட்டு முடிந்ததும், அடுத்து இரு குழுக்கள் உருவாக்கப்பட்டு, விளையாட்டைத் தொடரலாம். இவ்வாறு அனைத்து மாணவர்களையும் விளையாட்டில் பங்கேற்கச் செய்யலாம்.

இந்த விளையாட்டின் மூலம் தனிமங்களின் பெயர்களையும், அதற்கான சரியான குறியீடுகளையும் மாணவர்கள் தெளிவாக அறிந்துகொள்ளலாம். எந்தத் தனிமம், எந்தத் தனிமத்தோடு சேர்ந்தால் சேர்மம் உண்டாகும் என்பதையும் புரிந்துகொள்வார்கள். தவறான தனிமங்களை இணைத்து சேர்மங்களை உருவாக்க முடியாது என்பதை உணர்வார்கள்.

எடுத்துக்காட்டாக...

விளையாட்டு முறையில் பயிலுதல்!

குழு 1: H, CL, Na, H, Oஆகிய தனிமங்களைக்கொண்டு, Nacl, H2O, HCLஆகிய மூன்று சேர்மங்களை உருவாக்கலாம்.

குழு 2: K, H, O, Cl, Oஆகிய தனிமங்களைக்கொண்டு, KCL, HCL ஆகிய இரு சேர்மங்களை உருவாக்க முடியும்.

- ரெ.ரமாதேவி,      
அரசு உயர்நிலைப் பள்ளி,
ஆவூர், திருவண்ணாமலை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு