ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

விளையாடி நடிப்போம்... வேளாண்மை படிப்போம்!

விளையாடி நடிப்போம்... வேளாண்மை படிப்போம்!

##~##

வேளாண்மையில் சிறந்த நாடு இந்தியா. வேளாண்மையின் வேலைகளான உழுதல், விதைத்தல், நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், களை பறித்தல், பயிர்களைக் காத்தல், அறுவடை போன்றவற்றை ஒரு விளையாட்டு மூலம் விளக்கலாம்.

முதலில், ஆசிரியர் ஒரு துண்டுத் தாளில் மேற்கண்ட படிகளைத் தனித்தனியாக எழுதிச் சுருட்டி, வகுப்பின் முன்புறம் வைக்கவும். பின்னர், மாணவர்களை நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கவும். ஒரு குழுவில் ஒரு மாணவன் மட்டும் தனித்து நிற்க, மற்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்தச் சுருட்டப்பட்ட தாள்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து, தங்களுக்குள்ளே படித்துப்பார்க்க வேண்டும். பின்னர், அவர்கள் அனைவரும் கூடிப்பேசி, சைகை நடிப்பு மூலம் (வசனம் பேசாமல்) செய்துகாட்டி, வேளாண்மையின் படிநிலைகளைத் தனியாக நிற்கும் மாணவனுக்குப் புரியவைக்க வேண்டும். அந்த மாணவன் சரியாக அதைக் கண்டறிந்தால், அந்தக் குழுவினர் வெற்றி பெற்றவராவர்.

விளையாடி நடிப்போம்... வேளாண்மை படிப்போம்!

உதாரணமாக... அந்த மாணவர்கள் எடுத்த துண்டுச் சீட்டில், 'பயிர்களைக் காத்தல்’ என்ற படிநிலை இருந்தால், அவர்களில் சில பேர் ஆடு, மாடுகள் போல நடிக்கலாம். ஆடுகள் வயலில் மேய்வதாகவும், உழவன் அவற்றை விரட்டி, பயிர்களைக் கண்ணுங்கருத்துமாகக் காப்பதாகவும் உடல் அசைவுகளால் நடிக்க வேண்டும். தனித்த மாணவன், அதைக் கண்டறிந்ததும் அவர்கள் அனைவரும் கூடிப் பயிர்களைக் காத்தலின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூற வேண்டும். இவ்வாறு அனைத்துக் குழுவினரும் செய்யலாம்.

விளையாடி நடிப்போம்... வேளாண்மை படிப்போம்!

மாணவர்களின் நடிப்பாற்றல், கண்டறியும் வேகம் ஆகியவற்றைக்கொண்டு, மதிப்பீடு வழங்கலாம்.

- ஜெ.திருமுருகன்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
 மூலத்துறை,                
காரமடை.