ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

கோணங்கள் உருவாக்குவோம்!

கோணங்கள் உருவாக்குவோம்!

##~##

ஆசிரியர், சார்ட் பேப்பரில் செங்கோணம், குறுங்கோணம், விரிகோணம் என எழுதிவைக்கவும். அதேபோல, மின் அட்டையில் 90, 90-க்கும் குறைவான மற்றும் அதிகமான டிகிரி அளவுகள் மற்றும்  நேரங்களை (9 மணி, 5.25 மணி, 3 மணி, 10.25 மணி) என மாணவர் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு, பல மின் அட்டைகளைத் தயாரித்துக்கொள்ளவும்.

கோணங்கள் உருவாக்குவோம்!

மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரிக்கவும்.  இப்போது, ஆசிரியர் 'செங்கோணம்’ என்று எழுதிய சார்ட் தாளைக் காட்ட, மாணவர்கள் தங்கள் குழு மாணவரைக்கொண்டு செங்கோணத்தை உருவாக்க வேண்டும். எந்தக் குழு முதலில் செய்கின்றனரோ, அந்தக் குழுவினருக்கு மதிப்பீடு தரலாம். இதைப் போலவே மற்ற கோணங்களையும் உருவாக வைக்கலாம்.

அடுத்து, 90 டிகிரி எழுதிய தாளைக் காட்ட, மாணவர்கள் தமது குழுவில் செங்கோணத்தை தன் கைகளால் உருவாக்கிக் காட்ட வேண்டும். 36 டிகிரி எழுதிய தாளைக் காட்ட, மாணவர்கள் குறுங்கோணத்தை உருவாக்கிக் காட்ட வேண்டும். எந்தக் குழு முதலில் செய்கின்றதோ, அந்தக் குழுவுக்கு மதிப்பீடு வழங்கி ஊக்குவிக்கலாம்.
 

இதுபோல, டிகிரி அளவு எழுதப்பட்ட தாளை ஒரு குழுவினருக்கும், கடிகார நேரம் குறிக்கப்பட்ட மின் அட்டையை ஒரு குழுவினருக்கும் கொடுக்கவும்.  ஒவ்வொரு குழுவிலும் ஒருவர், தாம் வைத்துள்ள மின் அட்டையில் உள்ளதை வாசிக்க, பிற குழுவில் உள்ள  ஒருவர், குழுவில் விவாதித்து, மின் அட்டையில் உள்ள செயலைச் செய்ய வேண்டும். கடிகார அளவுகளைக் கரும்பலகையில் வரையச் செய்யவும். சின்ன, பெரிய முள் நிற்கும் இடத்தைப் பொறுத்து, கோணத்தின் வகையைக் கூறச் செய்யவும். டிகிரி அளவுகள் கூறும்போது, கோண வகையை மட்டும் சொல்லாமல், கோணத்தைக் கரும்பலகையில் வரைந்து எழுத செய்யவும்.

கோணங்கள் உருவாக்குவோம்!

இந்தச் செயல்பாடு,  குறுங்கோணம்,  செங்கோணம், விரிகோணம் குறித்த புரிதலை மாணவர்களிடம் வலுப்படுத்தும்.

- க.சரவணன்,
டாக்டர் டி.திருஞானம் துவக்கப் பள்ளி,
கீழ்ச்சந்தைப்பேட்டை, மதுரை-9.