Published:Updated:

கதை சொல்லப்போறோம்!

கதை சொல்லப்போறோம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது, உலகம் வெப்பமாதல் போன்ற விஷயங்களை மாணவர்களின் மனதில் எளிதாகப் பதியவைக்க, பாடல் வடிவில் கதை சொல்லவைத்து விளக்கலாம். சந்தம், எதுகை, மோனை எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தானே தயாரித்த கதைப் பாடலுடன் ஒரு மாணவர் வகுப்பில், ஓசை நயத்துடன் தெளிவாக உச்சரித்தாலே போதும். அதில் உள்ள செய்திகள், மற்ற மாணவர்களின் மனதில் பதியும். உதாரணத்துக்கு குழுவாகச் சொல்ல, ஒரு கதைப் பாடல்...

கதை சொல்லப் போறோம் - நாங்க
கதையைச் சொல்ல வாறோம்
காலமிங்கே மாறுகின்ற - நிலையை
கதையில் சொல்லப் போறோம் - (கதை)

 காலம் மாறுவது தெரியும் அண்ணே - அதில்
புதுசா என்ன சொல்லப் போறீங்க?

 காலையிலே வாசலிலே எச்சிலைத் துப்புறோம்  
குழந்தைகளை அங்கே மலம் கழிக்க வைக்கிறோம்
வீட்டுக்கழிவை வீதியிலே ஊர்வலம் விடுறோம்
சாலையிலே சாக்கடையைச் சங்கமமா ஆக்குறோம்

கதை சொல்லப்போறோம்!

ஈயும் கொசுவும் அங்கே பிறக்குதடா - தம்பி
பறந்து பறந்து அமரும் பலகாரக்கடையை - நம்பி
பாவம் சனங்க கூட்டம் கேட்டுக் கேட்டு வாங்குது
சுவைதான்னு சொல்லி வியாபாரம் சூடு பறக்குது (கதை)

அவங்க வீடு.... அவங்க வாசல் - அண்ணே
அவங்க காசு நமக்கென்ன பிரச்னை? 

கதை சொல்லப்போறோம்!

எச்சிலை எங்கே துப்புறான்? - தம்பி
மலத்தை எங்கே கழிக்கிறான்? அதே வாசல்ல
அங்கே வரும் ஈ, கொசு விருந்தாளிங்க
அடுத்த வீட்டுக்கும் எதிர்த்த வீட்டுக்கும் வருது தம்பி!

 எனக்கு தெளிவாப் புரிஞ்சது - அண்ணே
எதிர்த்த வீடு என்னுதுதான் அண்ணே!

 சாக்கடை ஈ பறந்து கடை போண்டாவில் உட்காருது
சாப்பிடும் ஜனங்க உடம்புதான் கெடுது
மருத்துவமனை தேடி ஓடுது - இது
மாறணும் தம்பி நிலை மாறணும் தம்பி

நல்லாப் புரிஞ்சது அண்ணே
நம்மைச் சுற்றியும் சுத்தம் வேணும் அண்ணே!

- மா.பழனி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ன்னப்பளத்தூர், தருமபுரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு