Published:Updated:

தீய பழக்கங்கள்... ஒரு விவாதம்

தீய பழக்கங்கள்... ஒரு விவாதம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

 விவாதங்கள், பட்டிமன்றங்கள் மூலம் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது, அது எளிதில் மனதில் பதியும். இதோ ஒரு விவாதம்...

அமர்நாத்: மனிதர்களின் உடல் நலத்தையும் மானம் மரியாதையையும் கெடுக்கக் கூடியது தீய பழக்கங்கள். குடும்பத்தையும் நாட்டையும் சீரழித்து, மனித வளத்தை முடக்கும் தீய பழக்கங்களை ஒழிக்க முடியுமா...  முடியாதா? விவாதிக்க வருகிறார்கள் நண்பர்கள். முதலில் வருகிறார் எழில்.

எழில்: தீய பழக்கம் என்பது, தவறான சேர்க்கையால் ஏற்படுவது. எனவே, தவறான சேர்க்கையைத் தவிர்த்தால் மூலம் தீய பழக்கம் நம்மை அண்டாது.

கலை: தவறான சேர்க்கை மட்டுமே தீய பழக்கத்துக்குக் காரணம் அல்ல. ஒரு மனிதனை தீய பழக்கத்துக்குக் ஆளாக்குவதே சமூகம்தான். இந்தச் சமூகத்தின் மீதுள்ள கோபத்தினாலேயே ஒருவன் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறான்.

பவித்ரா: சமூகத்தின் மீது என்ன கோபம் இருந்தாலும் அதற்குத் தீர்வு, தீய பழக்கத்துக்கு அடிமையாவது அல்ல. அதை எதிர்த்துப் போராட வேண்டும். தீய பழக்கத்துக்கு காரணம் கற்பிப்பது அழகு அல்ல. ஆறறிவுள்ள மனிதன் சிந்தித்துச் செயல்பட்டால், தீய பழக்கத்தை நிச்சயம் ஒழிக்க முடியும்.

தீய பழக்கங்கள்... ஒரு விவாதம்

விஜயகுமார்: குடும்பச் சூழ்நிலை, கல்வி அறிவின்மை, ஏழ்மை போன்றவையும் தீய பழக்கம் ஏற்படக் காரணம். ஒவ்வொரு குடும்பமும் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும். மக்களிடம் வறுமையை ஒழிக்காதவரை தீய பழக்கங்களை ஒழிக்க முடியாது.

பெரியநாயகி: விடுதலை அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒழிக்க முடியாத வறுமையை ஒரே நாளில் ஒழித்துவிட முடியாது. மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தீய பழக்கங்களை  ஒழிக்கலாம்.

செல்வராயர்: 'குடி குடியைக் கெடுக்கும்’ என்று எழுதிய பாட்டிலில்தானே மதுவை விற்பனை செய்கிறார்கள். அதைப் படித்து, விழிப்பு உணர்வு ஏற்பட்டிருந்தால், நம் நாட்டில் இத்தனை குடிகாரர்கள் உருவாகியிருக்க மாட்டார்களே. திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் தீய பழக்க வழக்கக் காட்சிகள் வருகின்றன. அதுவும் முக்கியக் காரணம்.

அமர்நாத்: எல்லோரும் சிறப்பாகப் பேசினீர்கள். பலவீனமான மனமும், பிரச்னையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமையுமே ஒருவனை தீய பழக்கத்துக்கு அடிமை ஆக்குகிறது. பிறகு, அந்தப் பழக்கமே அவனை அழித்துவிடுகிறது. எந்தச் சூழ்நிலையிலும் உடலையும் மனதையும் கெடுக்கும் தவறான விஷயத்தைச் செய்யக் கூடாது என்று உறுதி எடுத்தால், தீய பழக்கத்தை நிச்சயம் ஒழிக்க முடியும். ஊடகங்களும் இது குறித்து தீவிர விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்.

- இரத்தின. புகழேந்தி.
பங்கேற்பு: 9-ம் வகுப்பு மாணவர்கள்,
அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு