பிரீமியம் ஸ்டோரி
##~##

 ணக்கம், நான் பணம் பேசுகிறேன்.

'பணம் பத்தும் செய்யும்’, 'பணம் பாதாளம் வரை பாயும்’ என்று என்னைப் பற்றிய பழமொழிகள் ஏராளம்.  இந்த உலகத்தில் நான் இல்லாத இடமே இல்லை. செல்லாத இடமும் இல்லை.

முதன்முதலில் நான் லத்தீன் மொழியில் 'மானட்டா’ என்று அழைக்கப்பட்டேன். அது ஆங்கில மொழியில்  'Money’ என்று மருவியது.

என்னுடைய மதிப்பு என்பது, ஒரு பொருளின் விலையைச் சார்ந்தது. நான் ஓவ்வொரு மனிதனின் தேவையை உணர்ந்து உதவுகிறேன்.

என்னை வங்கி, அஞ்சலகம் போன்ற துறைகள் மூலம் சேமிக்கின்றனர்.

எல்லா நாடுகளிலும் நான் இருக்கிறேன். ஓவ்வொரு நாட்டினரும் என்னை வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.

ரூபாய் (Rupees), இக்சா(aksa), கோலன் (Colon), டைம் (Dime), டோங் (Dong), யூரோ (Euro), ரியால் (Reaal), யுவான் (yuvan), டாலர் (Dallar)  போன்றவை அவற்றில் சில பெயர்கள்.

என் பெயர் பணம்!

பண்டைய காலத்தில்... இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் என்னை வடிவமைத்தனர். உலோகமாக இருந்தபோது எடுத்துச் செல்வது சிரமம் நிறைந்ததாகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. 15 மற்றும் 16-ம் நூற்றாண்டுகளில்தான் ஐரோப்பிய வணிகர்கள், தாங்கள் பெற்றுக்கொண்ட உலோகப் பணத்துக்கு, ரசீதுகளாக என்னை எடுத்துச்செல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

காகிதக் கண்டுபிடிப்பின் விளைவாக, பல வண்ணங்களில் புது வடிவத்தைப் பெற்று, இப்போது கரன்சியாக உலகில் உலாவுகிறேன்.

'நான் அனைவருக்கும் சிறந்த நண்பனாக இருக்கவே விரும்புகிறேன்’ என்று சொல்லி, என் சிற்றுரையை முடிக்கிறேன்.

இதுபோல, வகுப்பு மாணவர்களில் ஒருவரை காகிதப் பணம், ஒருவரை செப்புக்காசு, மற்றொருவரை தங்கக் காசு எனப் பிரித்தும் உரையாடவைக்கலாம். இதன் மூலம், சேமிப்பு மற்றும் முதலீடு பாடத்தை மனதில் பதியவைக்கலாம்.

- எஸ்.ரஜினி, அ.மே.நி.பள்ளி, கொரட்டி, வேலூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு