Published:Updated:

பள்ளியில் தேர்தல் களம்!

பள்ளியில் தேர்தல் களம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

தேர்தலுக்குத் தயாராகிவிட்டனர் 5-ம் வகுப்பு மாணவர்கள். 5-ம் வகுப்பிலே தேர்தலா என்று ஆச்சரியப்பட வேண்டாம். சமூக அறிவியலில் வரும் 'உள்ளாட்சி அமைப்புகள்’ பாடத்துக்கான செயல்பாடுதான் இது.

வேட்பாளர்களாக நான்கு மாணவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். பந்து, குடை, தாமரை, தீபவிளக்கு என தேர்தல் சின்னங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. காலையில் ஆரம்பித்தது தேர்தல் பிரசாரம்.

பள்ளியைத் தூய்மையாக்கல், பசுமையாக்கல் என்று வாக்குறுதிகளுடன் வித்தியாசமான பிரசாரம் முடிந்தது. வாக்குப் பதிவு செய்யும் அறையில் பூத் ஏஜென்ட்கள், பெயர்களைச் சரிபார்க்கும் அதிகாரிகள், மை வைப்பவர், வாக்குப் பதியும் இடம், மற்றும் வாக்குச் சேகரிக்கும் பெட்டி என அனைத்தும் முழுமை பெற்ற பின், வாக்குப் பதிவு ஆரம்பமானது. கள்ள வாக்கைத் தடுக்க, பள்ளியின் அடையாள அட்டையைக் காண்பித்தனர் மாணவ வாக்காளர்கள்.

தங்களுடைய பூத் சிலிப், அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பிறகு, வாக்குப் பதிவு செய்வதன் அடையாளமாக விரலில் மை  வைத்துக்கொண்டார்கள். தங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையில், அந்த வகுப்பின் பே.மணிகண்டன் அதிக வாக்குகளில் வெற்றி பெற்றார்.

பள்ளியில் தேர்தல் களம்!

இந்தச் செயல்பாட்டின்போது, வாக்கு அளிப்பதன் முக்கியத்துவம் போன்றவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவடைந்தனர் மாணவர்கள்.

 - கா.திவ்விய தரிசனன்,  தியாகராஜா தொடக்கப் பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு