Published:Updated:

காட்டுக்குள் கலை விழா!

காட்டுக்குள் கலை விழா!

பிரீமியம் ஸ்டோரி
##~##

மாணவர்களுக்கு, ஒரு கதையின் தொடக்கத்தை மட்டும் கூற வேண்டும். அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாணவரும் கதையின் அடுத்த பாராவை வளர்க்க வேண்டும். இவ்வாறு, ஒரு முழுக் கதையை உருவாக்கலாம். அதனைப் பாத்திரங்களுக்கு ஏற்ப முகமூடி அணிந்து, நாடகமாக நடிக்கச் செய்து, மதிப்பீடு செய்யலாம். உதாரணத்துக்கு இங்கே ஒரு கதை... (ஒவ்வொரு பாராவையும் ஒரு மாணவர் சொன்னதாக நினைத்துக்கொள்க.)

அடுத்த வாரத்தில் வரும் சிங்காராஜா பிறந்த நாளை, எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடலாம் என்பதில் மந்திரிகளான 'நரி’ ராயனுக்கும் 'புறா’ மாறனுக்கும் பெரிய போட்டியே ஏற்பட்டது.

விழா நிகழ்ச்சிகள் முடிவு செய்யப்பட்டன. ஆடல், பாடல், இசைக் கச்சேரி எனப் புறா மாறன் விமரிசையாக விழாவைக் கொண்டாட இருப்பதைத் தந்திரமாக அறிந்துகொண்டது நரி ராயன்.

தானும் அதேபோல செய்து, சிங்க ராஜாவின் மதிப்பைப் பெற ரகசிய ஏற்பாடுகளைச் செய்தது. விழா நாளும் வந்தது. சிங்க ராஜாவுக்கு மலர்களால் ஆன கிரீடத்தைப் புறா மாறன் சூட்ட, நரி ராயன், எலும்பு மாலை அணிவித்தது.

புறா மாறன் சார்பில் குயில் பாட, சிங்கிங் பேர்ட் இசை அமைத்தது. அதற்கு மயில் நடனம் ஆட, விழா களைகட்டியது. சிங்க ராஜா நிகழ்ச்சியை ரசித்தது.

காட்டுக்குள் கலை விழா!

நரி ராயனுக்கோ பொறுக்கவில்லை. தன் சார்பில் தவளை, பாம்பு, கொசு ஆகியோரை கலை நிகழ்ச்சியில் களம் இறக்கியது. தவளை பாட ஆரம்பித்ததும் பாம்பு படம் எடுத்து ஆடியது. அதற்கு கொசு இசை அமைத்தது.

பாடிக்கொண்டிருந்த தவளை, திடீரெனக் நாக்கை நீட்டி கொசுவை லபக்கியது. அதே சமயத்தில், படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்த பாம்பு, தவளையைத் தாவிப்பிடித்து விழுங்கியது.

இதைக் கண்டு, விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஓட்டம்பிடித்தனர். விழாவில் குழப்பம் ஏற்படக் காரணமான நரியை, சிங்க ராஜா காடு கடத்தியது.

பங்கேற்பு:
 ஊ.ஒ.ந.நி.பள்ளி, படப்பள்ளி, ஊத்தாங்கரை.
- த.சிங்காரவேலன், தருமபுரி.

காட்டுக்குள் கலை விழா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு