##~## |
Prefix, Suffix பற்றிய தெளிவான விளக்கத்துக்கு உதவும் ஓர் எளிமையான செயல்பாடு இது.
ஒரு வார்த்தையின் முன் இணைக்கப்படும் சொல்லுக்கு Prefix என்று பெயர். அவ்வாறு புதிதாக உருவாகும் சொல், பெரும்பாலும் எதிர்ப்பதத்தை (Opposite) உணர்த்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வார்த்தையின் பின் பகுதியில் இணைக்கப்பட்டு, வேறொரு வார்த்தையை உருவாக்கக் கூடியது Suffix.
மாணவிகளில் இரு குழுவினரைத் தேர்ந்தெடுத்து, ஒரு குழு, வார்த்தைகளையும் (Different, Alert, Healthy, Natural) மற்றொரு குழு, un, ly, ness, co போன்ற Prefix, Suffix- ஐ எழுதிக்கொள்ள வேண்டும். இரு குழுக்களுக்கு இடையே, 'பொருத்தும் போட்டி’ வைத்து மதிப்பீடு அளிக்கலாம். உதாரணமாக, முதல் குழுவின் Healthy என்ற வார்த்தையை, இரண்டாம் குழு Un என்ற Prefix- உடன் சரியாகப் பொருத்தினால், Unhealthy என்ற புதிய சொல் கிடைக்கும்.

இந்தச் செயல்பாடு, சொற்களை அவற்றுக்குப் பொருத்தமான Prefix, Suffix -உடன் இணைக்க உதவும்.
'ஒவ்வொரு மாணவரும் அடுத்த நாள் பள்ளிக்கு வரும்போது, குறைந்தது நான்கு சொற்களை உருவாக்க வேண்டும்’ என்று சொல்லி, அதில் யார் அதிக சொற்களை உருவாக்கிவருகிறார்களோ, அவர்களைப் பாராட்டலாம். ஆங்கில அகராதியைப் பயன்படுத்தியும் இதைச் செய்யச் சொல்லலாம்.
மாணவர்கள், ஆங்கில இலக்கணத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள மிகவும் உதவும்.
- தி.பிரியதர்சினி,
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நாச்சியார்கோவில்.