இடைநிலை எண்ணை, ஓர் எளிய செயல்பாட்டின் மூலம் மாணவர்களுக்கு விளக்கலாம்.

உதாரணம்: 38, 66, 68, 30, 18 என்ற மதிப்புகளுக்கு இடைநிலை காண, அவற்றை சார்ட் அட்டைகளில் எழுதவும். அவற்றை மாணவர்கள் கைகளில் கொடுத்து, படிக்கட்டுகள் வடிவில் நிற்கச் சொல்லவும்.

ஆசிரியர் 'ரெடி’ என்றதும், மாணவர்கள் ஏறுவரிசையில் எண்களை அடைத்து நிற்பார்கள். 'ஸ்டார்ட்’ என்றதும் மேலே உள்ள இருவரும், கீழே உள்ள இருவரும் சற்றே விலகிச் சென்று நிற்பார்கள். இடையில் உள்ளவர், ''நான்தான் இடைநிலை எண் 38'' என விடை அளிப்பார். ஒருவேளை, இடைநிலை எண் இரண்டு அமைந்தால், இரு எண்களையும் கூட்டி, இரண்டால் வகுத்து, விடை அளிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, இடைநிலை எண்கள் 10 மற்றும் 12 ஆகிய எண்களாக இருந்தால், இரண்டையும் கூட்டி வரும் 22 -ஐ இரண்டால் வகுத்தால், 11 வரும். அதுவே இடைநிலை எண் ஆகும்.

மாணவர்களின் ஆர்வம், குழுவோடு இணைந்து செயல்படுதல் ஆகியவற்றைக்கொண்டு மதிப்பீடு வழங்கலாம்.

முகடு அறிய வகுப்பறையில் பயன்படுத்தப்படும் ரப்பர், ஸ்கேல், பென்சில், பேனா போன்றவற்றை அனைத்து மாணவர்களிடம் இருந்தும் சேகரித்து, மேஜை மேல் வைக்கவும். ஒவ்வொரு மாணவரையும் அழைத்துக் கேட்கும்போது, அவன் ஒவ்வொன்றையும் எண்ணிப்பார்த்து, அதிக எண்ணிக்கையில் உள்ள பொருளை முகடு எனக் கூறுவான்.

உதாரணத்துக்கு...

பென்சில் 12, ரப்பர் 8, பேனா 22 என்ற எண்ணிக்கையில் இருந்தால், பேனாதான் முகடு.

இவ்வாறு மாற்றி மாற்றிப் பொருள்களை வைத்து தனிப்பட்ட முறையில் மாணவர்கள் அனைவரிடமும் கேட்டறிந்து, மதிப்பீடு வழங்கலாம்.

- எஸ்.ஜெயமாலா
சிவில் ஏவியேஷன் ந.நி.பள்ளி,
சென்னை-27.