முக்கோணங்களின் ஆறு வகைகளை எளிதில் மனதில் நிலைநிறுத்த, மாணவர்கள் கீழ்க்கண்ட ஓர் எளிய செயல்திட்டத்தைச் செய்து, மதிப்பீட்டை அள்ளலாம்.

கடைகளில் ஸ்டிக்கர் பொட்டுகள் தொங்கவிடப்பட்டிருக்கும் காலியான பிளாஸ்டிக் கவரைக் கேட்டு வாங்கிக்கொள்ளவும்.

அதில் உள்ள 12 உறைகளுக்கும் தகுந்தவாறு சார்ட் அட்டைகளை வெட்டிக்கொள்ளவும். ஆறு அட்டைகளில், ஆறு வகையான முக்கோணங்களை வரைந்துகொள்ளவும். அடுத்த ஆறு அட்டைகளில்...

சமபக்க முக்கோணம்
இரு சமபக்க முக்கோணம்
அசமபக்க முக்கோணம்
குறுங்கோண முக்கோணம்
செங்கோண முக்கோணம்
விரிகோண முக்கோணம்

ஆகிய ஆறு முக்கோண வகைகளின் பெயர்களை எழுதிக்கொள்ளவும். படத்தில் காட்டியவாறு, வரைந்திருக்கும் முக்கோணங்களுக்குச் சரியான பெயருள்ள அட்டையைச் செருகவும்.

செயல்திட்டம் தயார். இதை ஆசிரியரிடம் காண்பித்து, மதிப்பீட்டை வாங்கிய பின்னர், வகுப்பறையின் சுவரில் ஆணி அடித்து, அதை நிரந்தரமாகத் தொங்கவிடலாம். தினமும் அதைப் பார்ப்பதால், கற்ற பாடம் மறக்காது.

இதன் இன்னொரு செயல்பாடாக, பெயர் எழுதிய அட்டைகளை வரிசை மாற்றி வைத்து, மற்ற மாணவர்களைச் சரியான முக்கோணங்களுக்கு ஏற்ற பெயர்களைப் பொருத்தச் சொல்லியும் மதிப்பிடலாம். 12 அட்டைகளையும் 12 மாணவர்களிடம் கொடுத்து, ஒரு முக்கோணத்தின் வகையைச் சொன்னவுடன், அந்த முக்கோண வகைப் பெயர், அட்டை வைத்திருக்கும் மாணவர், அதே வகை முக்கோண ஓவியம் வைத்திருக்கும் மாணவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த இரண்டு பேரில் ஒருவர், அந்த முக்கோணத்தைப் பற்றி வகுப்பின் மற்ற மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

மாணவர்களின் ஆர்வம், விரைந்து செயல்படும் தன்மை ஆகியவற்றைக்கொண்டு மதிப்பிடலாம்.

ஜெ.திருமுருகன்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, மூலத்துறை,
காரமடை.