FA பக்கங்கள்
Published:Updated:

பண்பாட்டுச் சின்னங்களை அறிவோம்,

பண்பாட்டுச் சின்னங்களை அறிவோம்,

'தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுகள்’ பாடத்தினை நடத்திவிட்டு, பள்ளிக்கு அருகே இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்துக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல முடிவு எடுத்தோம்.

எங்கள் பள்ளி அமைந்திருக்கும் கொரட்டியில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ காளத்தி நாதர் என்ற கோயில் உள்ளது. அந்தத் தலத்தின் வரலாற்றை அறிந்துகொள்ளச் செய்தோம்.

கொரட்டி எனும் பெயரின் காரணம் தெரிந்தது. கௌசிக மாமுனியால் சாபம் பெற்ற பதுமமுகி என்பவள், அரக்கியாக மாறினாள். அவள், இந்த இடத்தில் 100 ஆண்டுகள் குறட்டைவிட்டுத் தூங்கினாள். அதனால், இந்த ஊருக்கு கொரட்டை என்று பெயர் வந்தது. காலப்போக்கில் கொரட்டி என்று மாறிவிட்டதாம்.

பண்பாட்டுச் சின்னங்களை அறிவோம்,

இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீகாளத்தி நாதர் சிலை, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. 'திருமந்திரத் தமிழ்மாமணி’ என்று அழைக்கப்பட்ட பேராசிரியர் ஜி.வில்சன் அமல்ராஜ் என்பவரின் கனவில் தோன்றிய உருவத்தை, ஹாபீத் என்ற ஓவிய ஆசிரியர் படமாக வரைந்தார். அதற்கு ஐம்பொன்னால் சிலை செய்துக்கொடுத்தவர் சுப்பிரமணியன் என்பவர். செவ்வாய்தோறும் வார வழிபாடு நடைபெறுகிறது என்கிற தகவலை மாணவர்கள் அறிந்துகொண்டனர்.

கிராம மக்களிடம் மாணவர்கள் உரையாடி, கோயிலில் சுரங்கம் மற்றும் கல்வெட்டுகள் இருப்பதை அறிந்தனர்.

கோயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த மாணவர்கள், ''நாம் அனைவரும் பாரதத் தாயின் பிள்ளைகள், இந்தியர்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற எண்ணமும் இந்திய ஒருமைப்பாட்டை வளர்க்கும் இடமாகவும் இந்த ஊர் விளங்குகிறது'' என்றனர்.

இதுபோல நம்மைச் சுற்றி இருக்கும் புராதன இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லலாம்.மாணவர்களின் ஆர்வம், சுற்றிப் பார்க்கும் இடத்தில், படித்த பாடத்தில் இருக்கும் பகுதியை நினைவு கூரல்  அடிப்படையில் மதிப்பிடலாம்.

- எஸ்.ரஜினி
அரசு மேல்நிலைப் பள்ளி, கொரட்டி.