Published:Updated:

மூவாயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மூவாயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள்!
மூவாயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள்!

மூவாயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!


                             

'தமிழக அரசு இயந்திரமே ஸ்தம்பித்துக்கிடக்கிறது. எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படாம, துருப்பிடிச்சுக்கிடக்கு" என்ற விமர்சனம் அனைத்துக் கட்சிகளாலும் முன் வைக்கப்படுகிறது. ஆனால், அவர்களேகூட மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு தமிழக அரசின் ஒரே ஒரு துறை மட்டும் சிறப்பாகச் செயல்படுகிறது. அது, பள்ளிக் கல்வித்துறை. பல்வேறு அதிரடி, முன்மாதிரித் திட்டங்களைத் தொடர்ச்சியாக அறிவித்து, பள்ளிக் கல்வித்துறையை முன்னேற்றப் பாதையில் உருளவைத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தத் துறையின் அமைச்சர் செங்கோட்டையனும் அந்தத் துறையின் செயலாளர் ப.உதயச்சந்திரனும்தான்.

உதயச்சந்திரனின் அட்ராசக்கை ரக திட்டங்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பேதும் சொல்லாமல் ஒகே சொல்ல, அந்தத் துறையில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்படுகிறது. இதோ, அடுத்ததாக தமிழக அளவில் உள்ள மூவாயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, தன்னார்வத்தில் தமிழகம் முழுக்க ஸ்பான்ஸர்கள் மூலமாக நிதி திரட்டி, அத்தகைய ஸ்மார்ட் கிளாஸ்ரூம்களோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும், 25 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை நேற்று தலைமைச் செயலகத்துக்கு அழைத்த ப,உதயச்சந்திரன், அவர்களைவைத்து தமிழ்நாடு முழுக்க 3000 அரசுப் பள்ளிகளை ரெஃபர் பண்ணச் சொல்லி அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறார்.

'

ப.உதயசந்திரன்- தலைமை ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குச் சென்று வந்த, நமக்குத் தெரிந்த தலைமை ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம்.
"கடந்த வாரமே தமிழ்நாடு முழுக்க தன்னார்வத்தில் தங்கள் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்ரூம்களை சிறப்பாகச் செய்துவரும் 25 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை 8-ம் தேதி சென்னைக்கு வரச் சொல்லி சர்க்குலர் வந்தது. நாங்களும் ஆர்வமா நேற்று போனோம். அப்போது, எங்கள் ஒவ்வொருவருக்கும் கைகொடுத்துப் பாராட்டிய ப,உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., 'உங்க செயல்பாடுகள் உண்மையில் போற்றத்தக்கது. அரசு செய்யவேண்டிய பணிகளை நீங்களே செய்வதற்கு, உங்களுக்கு இயல்பிலேயே பெரிய அர்ப்பணிப்புத்திறன் இருக்க வேண்டும். அந்தத் திறன், உங்களுக்கு அமைந்ததை நான் மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள், தனிபட்ட முறையில் உங்கள் பள்ளிகளில் செயல்படுத்திய ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் ஏற்பாட்டை, இப்போது அரசே செய்யப்போகிறது. தமிழகம் முழுக்க 3000 ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முதல்கட்டமாக அமைக்கப் போகிறோம். ஒவ்வொரு பள்ளிக்கும்  2 லட்ச ரூபாய் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்பட இருக்கு. உங்களை அழைத்ததற்குக் காரணம், உங்கள் மூலமாகத்தான் அந்த  3000 பள்ளிகளை செலெக்ட் செய்யப்போறோம். 


அதாவது, அரசு இவ்வளவு செலவு பண்ணி ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைத்துக்கொடுத்தாலும் அதைப் பயன்படுத்தாமல், பல பள்ளிகளில் வீணடித்துவிடக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அதோடு, பல பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைக்கும் அளவுக்கு அடிப்படைக் கட்டமைப்பும் இருக்காது. நாங்களே தமிழகம் முழுக்க போய்,  3000 பள்ளிகளைத் தேர்வுசெய்வதில் காலதாமதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதோடு, எங்கள் துறையில் கீழ்நிலையில் உள்ளவர்கள், பள்ளிகள் தேர்வு செய்யும் விஷயத்தில் விருப்பு வெறுப்போடு செயல்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அதனால், உண்மையான அக்கறையோடு கல்வி போதிக்கும் விஷயத்தில் செயல்படும் உங்க மூலமா அந்தப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்க மாவட்டங்களில் சிறப்பாகச் செயல்படும், கல்வி போதிப்பதில் அர்ப்பணிப்போடு செயல்படும், ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அற்ற  3000 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து,  15 நாள்களுக்குள் எனக்குத் தெரிவியுங்கள். அரசுப் பள்ளிகளை நாம் அனைவரும் சேர்ந்து அடுத்த லெவலுக்குக் கொண்டுபோவோம்' என்று சொல்ல, எங்களுக்கு மகிழ்ச்சி தாங்கலை. 'கண்டிப்பா தேர்ந்தெடுத்துச் சொல்றோம் சார். எங்களுக்கு ஸ்பான்ஸர்ஸ் கிடைச்சதால, எங்களால் ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைக்க முடிஞ்சது. ஆனா, எங்களைப் போலவே ஆர்வமா செயல்பட மனமிருந்தும் நிதியுதவி கிடைக்காமல், அதற்கு என்ன வழி என்பது தெரியாமல் பல பள்ளி ஆசிரியர்கள் தமிழகம் முழுக்க இருக்காங்க சார். அவங்களுக்கு இப்படி அரசே ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைச்சுக் கொடுத்தா, தங்கள் பள்ளியை சிறப்பாக்குவாங்க சார். தகுதியான பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துச்சொல்றோம் சார்' என்று சொல்லிவிட்டு வந்தோம்" என்றார்கள்.


இது சம்பந்தமான நடவடிக்கைகள், திட்ட அப்ரூவலுக்காக அரசின் பார்வைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். அவர்கள் ஒ.கே செய்தால், தமிழகம் முழுக்க  3000 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைக்கப்பட்டு, அரசுப் பள்ளிகளின் கல்வி கற்பிக்கும் முறைகள் அடுத்த லெவலுக்குப் போகும் என்பது உறுதி. 


           

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு