ஒரு செவ்வக வடிவ மின் அட்டையை எடுத்துக்கொள்ளவும். அதன் மீது, முன்பின் ஆடும் சிறிய அட்டை ஒன்றை மேல் பகுதி மட்டும் இணைந்திருக்குமாறு ஒட்டவும். செவ்வக வடிவ அட்டையில், ஏதாவது ஒரு சொல்லைப் பிரித்து, தெளிவாக எழுதிக்கொள்ளவும்.

முன்பின் ஆடும் சிறிய அட்டையின் மீது, நிலைமொழியின் ஈற்றெழுத்து, வருமொழியின் முதல் எழுத்து மற்றும் கூட்டல் குறியீடு ஆகியன மறையும் வகையில், மாற்றம்பெறும் எழுத்தைப் பெரியதாக எழுதவும்.

எ.கா: சேர்த்து எழுதுதல்: தாம் உள = தாமுள
பிரித்து எழுதுதல்: தாமுள = தாம் உள

சேர்த்து எழுதுக, பிரித்து எழுதுக செயல்பாட்டைக் கரும்பலகையில் எழுதிக் கற்பிப்பதைவிட, மாணவர்கள் கையில் இந்த அட்டையைக் கொடுத்து, ஆசிரியர் விளக்குவதன் மூலம் தெளிவுபெறச்

செய்யலாம். பிறகு, மாணவர்களை அந்த அட்டையைக்கொண்டு விளக்கச் சொல்லுமாறு கேட்கலாம். மாணவர்கள், சந்தேகம் நீங்கித் தெளிவான விளக்கம் பெறுவார்கள்.

சேர்த்து எழுதும்போது, நிலைமொழியின் ஈற்றெழுத்து, மெய்யெழுத்தாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாக அமைந்தால், அவை, இணைந்து உயிர் மெய் வடிவம் பெறும் என்பதைத் தெளிவாக அறிவார்கள். (ம் + உ = மு).

இதனையே பிரித்து எழுதும் செயல்பாட்டுக்கு, மேலே சொன்னவாறு இணைந்து நிற்கும் உயிர்மெய் வடிவம், மெய்யெழுத்தாகவும் உயிரெழுத்தாகவும் பிரியும் என்பதைத் தெளிவாக அறியலாம். (மு = ம் + உ)

- ரெ.இரமாதேவி,
அரசினர் உயர்நிலைப் பள்ளி,
ஆவூர், தி.மலை மாவட்டம்.