'கடைசி வரை நம்பிக்கை’ துணைப்பாடத்தில் வரும் கொக்கினைப் போல, ஓரிகாமி கொக்கு செய்ய ஆசிரியர் கற்றுத்தரலாம்.

மாணவர்கள் செய்த கொக்குகளைக் கையில் வைத்துக்கொண்டு, துணைப்பாடத்தில் வரும் சிறுமி சடகோ போல நடித்துக் காட்டச் செய்யலாம். அந்த கொக்கு பேசுவதுபோல பாடத்தில் தெரிந்துகொண்ட செய்திகளைக் கூறவைக்கலாம்.

ஜப்பானில் அணுக்கதிர் வீச்சு மூலம் அவளுக்கு வந்த நோய் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டு வரச்செய்து, மாணவர்களைப் பேசவைக்கலாம்.

அதேபோல, செய்தித்தாள் அல்லது புத்தகங்களில் படித்த அணுகுண்டு பற்றியும், அணுக்கதிர் வீச்சு பற்றிய செய்திகளை, உரையாடலாக நிகழ்த்தலாம்.

'அணுக்கதிர் நன்மையா... தீமையா?’ என்று பட்டிமன்றம் ஒன்றை, மாணவர்கள் படித்த செய்திகளைக் கொண்டு நடத்தச் சொல்லலாம். ஆசிரியர், நடுவராக இருக்கலாம்.

இறுதியாக, ஒரிகாமி கொக்குகளை வகுப்பில் நூல் பந்தல் செய்து, அதில் தொங்கவிட்டு, அழகுபடுத்தலாம்.

திருக்குறள் நவீன சுவடி!

சார்ட் அட்டையில் மலரின் இதழ் போன்று கத்தரித்து எடுத்துக்கொள்ளவும். அவற்றை, மலர் போன்று விரித்துவைத்து, மையத்தில் மட்டும் ஒட்டிக்கொள்ளவும். ஒவ்வோர் இதழிலும், பாடப் பகுதியில் வரும் திருக்குறளை வண்ண வண்ணப் பேனாக்களால் எழுதவும். மையத்தில் நூலை கட்டித் தொங்கவிட்டால், வித்தியாசமான வடிவில் தெரியும்.

ஒவ்வோர் இதழையும் பிரித்து, அதில் இருக்கும் திருக்குறளை மாணவர் படிக்க வேண்டும். அந்தத் திருக்குறளுக்கு விளக்கம் தெரிந்த மாணவர்கள் எழுந்து, சொல்ல வேண்டும். விளக்கம் மட்டும் அல்லாமல், அதற்கு ஒரு கதையும் சொல்லத் தெரிந்த மாணவருக்கு, அதிக மதிப்பீடு அளிக்கலாம்.

- ப.குணசேகரன்
ஊ.ஒ.ந.நி.பள்ளி
பள்ளப்பட்டி.