
மாணவர்களிடம், அளவைகள் பற்றிய புரிதலை வளர்க்க இந்தச் செயல்பாடு உதவும். அரை லிட்டர், ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் எனப் பல்வேறு அளவுகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துக்கொள்ளவும். லிட்டர் அளவைகள் பற்றி விளக்கிக் கூறவும். பிறகு, கரும்பலகையில் பல்வேறு அளவைகளை எழுதவும். மாணவர்களிடம், வெவ்வேறு அளவைகள்கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி, அளவைகளை அளந்து சொல்லச் சொல்லுதல் வேண்டும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உதாரணமாக, 2 லிட்டர் கொள்ளளவு உள்ள பாட்டிலில், அரை லிட்டர் பாட்டில் மூலம் நீர் நிரப்பி ஊற்றச் செய்யவும். எத்தனை முறை ஊற்றினால், 2 லிட்டர் பாட்டில் நிறைகிறது என்பதை கூறச் செய்யலாம். இதன் மூலம், பல்வேறு அளவைகள் பற்றியும் நடைமுறை வாழ்க்கையில் அதன் பயன்பாடுபற்றியும் அறிந்துகொள்வர். மாணவர்களின் ஆர்வம், விரைவாகப் புரிந்துகொள்ளுதல் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.
- ஜி.கிறிஸ்டோபர்,
மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி,
கோயம்புத்தூர்.
