Published:Updated:

திருப்பூர் மாணவன் உத்தரப்பிரதேசத்தில் மரணம்..!

தி.ஜெயப்பிரகாஷ்
திருப்பூர் மாணவன் உத்தரப்பிரதேசத்தில் மரணம்..!
திருப்பூர் மாணவன் உத்தரப்பிரதேசத்தில் மரணம்..!

தேசிய அளவிலான கபாடிப் போட்டியில் கலந்துகொள்ள உத்தரப்பிரதேச மாநிலம் சென்ற திருப்பூர் மாணவன், உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாணவன் உத்தரப்பிரதேசத்தில் மரணம்..!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வித்யாலயம் பகுதியில் வசித்து வருபவர், மெக்கானிக் செந்தில்குமார். இவருடைய மகன் கார்த்திக், அதே பகுதியில் செயல்பட்டுவரும் பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 - ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கபாடி விளையாட்டு வீரரான கார்த்திக், திருப்பூரில் செயல்பட்டுவரும் ரூரல் ஒலிம்பிக் சங்கம் என்ற விளையாட்டு அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான கபாடிப் போட்டியில் பங்கேற்க, கடந்த வாரம் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவுக்குச் சென்றுள்ளார். அவருடன் சேர்ந்து பள்ளி மாணவர்கள் ஆறு பேரும் சென்றிருக்கிறார்கள்.

இந்நிலையில், மதுரா சென்றடைந்து விளையாட்டுப் போட்டிக்கு தயாராகிக்கொண்டிருந்த மாணவன் கார்த்திக்கிற்கு, தொண்டையில் சிறிதாக வீக்கம் ஏற்பட்டதாகவும்  கார்த்திக்கை உடனே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றதாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவர் கார்த்திக் இன்று இறந்துபோய்விட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, திருப்பூரிலுள்ள மாணவர் கார்த்திக்கின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விமானம்மூலம் உடனடியாக அவர்கள் மதுரா அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.