Published:Updated:

பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்

பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்
பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, நடந்துமுடிந்த 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 95 முதல் 100 சதவிகிதம் வரை தேர்ச்சிபெற்ற பள்ளித் தலைமையாசிரியர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் தலைமையேற்றுப் பேசிய மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், ‘’தேனி மாவட்டத்தில் 2016-17-ம் கல்வியாண்டில், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை வைத்துப் பார்க்கும்போது, 10-ம் வகுப்பில் 58 பள்ளிகளும் 12-ம் வகுப்பில் 22 பள்ளிகள் என மொத்தம் 80 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியடைந்திருக்கின்றன.

அதேபோல, 10-ம் வகுப்பில் 48 பள்ளிகளும் 12-ம் வகுப்பில் 30 பள்ளிகளும் என மொத்தம் 78 பள்ளிகள் 95 முதல் 99 சதவிகிதம் வரை தேர்ச்சியடைந்திருக்கிறன. மேலும், கடந்த ஆண்டு 96.5 சதவிகிதம் இருந்த 10-ம் வகுப்பு தேர்ச்சிவிகிதம், இந்த வருடம் 97.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதே போல, 95.1 சதவிகிதமாக இருந்த 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 95.9 விகிதமாக அதிகரித்துள்ளது. இந்தத் தேர்ச்சி விகிதத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால், நமது மாவட்டக் கல்வித்துறை சிறப்பாகச் செயல்பட்டு, அதிக தேர்ச்சி சதவிகிதத்தை அடைந்திருப்பது பாராட்டுக்குரியது. மாணவர்களுக்குத் தொடர் பாடத் தேர்வுகள் நடத்திட வேண்டும், எழுத்துத்திறனை மேம்படுத்த வேண்டும். அடுத்த வருடம் தேர்ச்சி விகிதத்தில் நமது மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும்’’ என்றார், மாவட்ட ஆட்சித்தலைவர்.