
மாணவர்களிடம், தங்கள் வீட்டின் அருகிலும் பள்ளிக்கு வரும் வழியிலும் காணப்படும் மண் வகைகளைச் சேகரித்து வரச் சொல்லவும்.
மாணவர்கள் கொண்டுவந்ததை வகைப்படுத்தி, அதன் பெயர்களைப் பட்டியல் இடவும். அவை காணப்படும் இடங்களைப் பற்றியும் விவரித்துக் கூறவும். அத்துடன், ஒவ்வொரு மண் வகையிலும் வளரும் பயிர்கள் பற்றிக் கூறி, பல்வேறு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளைச் சேகரிக்கச் சொல்லலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் செயல்பாட்டின்போது மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க, இந்திய வரைபடத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் மண் வகைகள் பற்றி பயிற்சிகள் வழங்கலாம். இதன் மூலம், இந்தியாவில் உள்ள மண் வகைகள், அவை காணப்படும் இடங்கள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் பயிர்கள் பற்றியும் அறிந்துகொள்வர்.
மாணவர்களை, குழுக்களாகப் பிரித்தும் இந்தச் செயல்பாட்டைச் செய்யலாம். மாணவர்களின் ஆர்வம், விரைவாகச் செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடலாம்.
- ஜி.கிறிஸ்டோபர்
மாநகராட்சி ஆரம்பப் பள்ளி,
ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.
