Published:Updated:

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்!

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்!

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்!

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்!

Published:Updated:

மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து, ஆய்வுக்கூடத்துக்கு அழைத்துச் செல்லவும். ஒவ்வொரு குழுவுக்கும் செயல்பாடு கொடுத்துச் செய்யச் சொல்லவும்.

முதல் குழு: தின்மம், திரவம், வாயு எவை எனக் கண்டறிய வேண்டும்.

இரண்டாம் குழு: ஒரு கண்ணாடிக் குவளையை எடுத்துக்கொண்டு, பாதி அளவு நீரை நிரப்ப வேண்டும். பேனாவில் உள்ள நீல நிற மையைக் கண்ணாடிக் குவளையில் சேர்த்து, உற்று நோக்கச் சொல்லவும். மூலக்கூறு ஒன்றோடு ஒன்று கலப்பதை உணரலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்!

மூன்றாம் குழு: கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை எடுத்துக்கொண்டு, நீர் மட்டத்தின் அளவைக் குறிக்க வேண்டும். சர்க்கரையைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி, உற்றுநோக்க வேண்டும். (இந்தச் செயலில், நீரின் அளவு மாறாமல், சுவை மாறும்). நீரின் மூலக்கூறுகளுக்கிடையே சர்க்கரை மூலக்கூறுகள் அடைத்துக்கொள்கின்றன. மூலக்கூறுகளுக்கு இடையே இடைவெளி உள்ளது என்பதை உணரலாம்.

இவ்வாறு மாணவர்களுக்கு ஆய்வின் மூலம் புரியவைக்கவும். அவர்களின் ஆர்வம், ஈடுபாடு செயல்முறைக்கு ஏற்ப மதிப்பீடு அளிக்கலாம்.

- எஸ்.ஜெயமாலா
சிவில் ஏவியேஷன் நடுநிலைப் பள்ளி, சென்னை-27.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism