களப் பயணமாக எங்கள் மாணவர்கள், பள்ளிக்கு அருகில் இருக்கும் மொசைக் கற்கள் தயாரிக்கும் இடத்துக்குச் சென்று, அங்கு வேலை செய்பவர்களிடம் நேர்காணல் செய்தனர். நேர்காணலின்போது அவர்களின் வேலை நேரம், ஆண்களுக்கு எவ்வளவு கூலி, பெண்களுக்கு எவ்வளவு கூலி போன்ற விவரங்களைச் சேகரித்துக்கொண்டு, வகுப்பறையில் கலந்துரையாடல் நடத்தினார்கள்.
விக்னேஷ்: ''ஆண்கள் கடினமான வேலைகளைச் செய்வதால், அதிகக் கூலி வழங்கப்படுகிறது.''
நந்தினி: ''பெண்களும்தான் ஆண்களுக்கு இணையாக வேலை செய்கிறார்கள்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சௌந்தர்யா: ''உண்மையே! சிந்திக்கும் செயல்திறனை அடிப்படையாகக்கொண்டு, வேலை செய்யும் இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவு சம்பளம் வழங்கப்படுகிறது.''
தனுசு: ''ஆனால், உடல்திறன் அடிப்படையில் வேலை செய்யும் இடங்களில்... ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படும் ஊதியத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பது தெரிகிறது. இது ஏன்?''

சங்கவி: ''ஆண்கள் செய்யும் சில கடினமான வேலைகளை பெண்கள் அதிகம் செய்ய முடியாது. அதனால், குறைந்த கூலி வழங்கப்படுகிறது.''
விக்னேஷ்: ''ஆண்கள், உறுதியான உடலமைப்பினால் கடினமான வேலைகளை நீண்ட நேரம் செய்ய முடிகிறது.''
நந்தினி: ''பெண்கள், கூலியை அதிகமாகப் பெறும் பொருட்டு ஆண்கள் செய்யும் வேலையைச் செய்தால் என்ன?''
சௌந்தர்யா: ''பெண்களும் வலிமை மற்றும் மன உறுதி மிக்கவர்களே. ஆனால், கடினமான வேலையைச் செய்யும்போது, அவர்களுக்கு உடல் வலி மற்றும் உடல் பிரச்னைகள் உருவாகின்றன. அதைத் தவிர்ப்பது நல்லதே.''
இதுபோன்ற கலந்துரையாடல்களை வகுப்பறையில் நிகழ்த்தி, மதிப்பீடு பெறலாம்.
- மூ.சங்கீதா,
ஊ.ஓ.நடுநிலைப் பள்ளி, மேற்கு ஆரணி.