Published:Updated:

இந்தியாவில் 37 சதவிகிதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் மின்சாரம் இல்லை!

இந்தியாவில் 37 சதவிகிதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் மின்சாரம் இல்லை!
இந்தியாவில் 37 சதவிகிதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் மின்சாரம் இல்லை!

'இந்த ஆண்டு மார்ச் வரையிலான கணக்கீட்டின்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 37 சதவிகிதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் மின்சார வசதி இல்லை' என்று மத்திய அரசு  நேற்று மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளார். 

தேசிய கல்வித் திட்ட பல்கலை மற்றும் நிர்வாகம் சார்பில், இந்தியாவிலுள்ள பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்குறித்த ஆய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் 62.81 சதவிகிதம் பள்ளிகளில் மின்சார வசதி இருக்கின்றது. டெல்லி, தாபர், சண்டிகர்,  ஹவேலி, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய இடங்களிலுள்ள பள்ளிகளில் 100 சதவிகிதம் மின்சார வசதி உள்ளது.

ஆனால், மிகவும் குறைவான மின்சார வசதி உள்ள பள்ளிகளைக்கொண்ட இடங்களாக, அஸ்ஸாம் (25%), மேகாலயா (28.54%), பீகார் (37.78%), மத்தியப்பிரதேசம் (28.80%), மணிப்பூர் (39.27%), ஒடிசா (33.03%) மற்றும் திரிபுரா (29.77%) உள்ளன. இதில், ஜார்கண்ட்டில் வெறும் 19% பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதிகொண்டு, கடைசி இடத்தில் உள்ளது.