Published:Updated:

பொறியியல் கலந்தாய்வு: மாணவர்களின் சாய்ஸ் இந்தப் படிப்புகளுக்குத்தான்!

பொறியியல் கலந்தாய்வு: மாணவர்களின் சாய்ஸ் இந்தப் படிப்புகளுக்குத்தான்!
பொறியியல் கலந்தாய்வு: மாணவர்களின் சாய்ஸ் இந்தப் படிப்புகளுக்குத்தான்!

பொறியியல் கலந்தாய்வின், 13-வது நாளில் 4,620 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்றுவருகிறது. ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி, பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. நேற்று, 13-வது நாளாக கலந்தாய்வு நடைபெற்றது.

நேற்றைய கலந்தாய்வுக்காக 7,754 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 4,620 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 3,100 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. நேற்றைய கலந்தாய்வில் மட்டும் அழைப்பு விடுத்தவர்களில் 39.98 சதவிகிதம் பேர் பங்கேற்கவில்லை. 13 நாள்கள் முடிவில், 58,476 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. முக்கியமாக 28,811 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. 13-வது நாள் கலந்தாய்வின் முடிவில், 1 லட்சத்து 16 ஆயிரத்து 980 இடங்கள் காலியாக உள்ளன.

அதிகபட்சமாக இ.சி.இ படிப்பை 11,920 பேர் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, மெக்கானிக்கல் படிப்பை 11, 409 பேர் தேர்ந்தெடுத்துள்ளனர். குறைந்தபட்சமாக ஐ.டி படிப்பை 3,860 பேர் தேர்ந்தெடுத்துள்ளனர்.