Published:Updated:

இடி தாக்கி மரணமடைந்த மாணவன்

தி.ஜெயப்பிரகாஷ்
இடி தாக்கி மரணமடைந்த மாணவன்
இடி தாக்கி மரணமடைந்த மாணவன்
இடி தாக்கி மரணமடைந்த மாணவன்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே பள்ளி மாணவர் ஒருவர், இடி தாக்கியதால் இறந்துபோன சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்ம், குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி என்ற ஊர் அமைந்திருக்கிறது. அப்பகுதிக்கு உட்பட்ட தவளைத்தோட்டம் என்ற இடத்தில் கணேசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் பரணிதரன், வெள்ளிரவெளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாள்களாக திருப்பூர் மாவட்ட பகுதிகளில் மாலை வேளைகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த மாணவன் பரணிதரனை இடி தாக்கி உள்ளது. எதிர்பாராவிதமாக நேர்ந்த இச்சம்பவத்தால் மாணவன் பரணிதரன் அந்த இடத்திலேயே நிலை குலைந்து விழுந்து மரணமடைந்தார். சம்பவம் குறித்து குன்னத்தூர் பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவனுக்கு நேர்ந்த இச்சம்பவத்தால் குன்னத்தூர் பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்