Published:Updated:

பொருளாதாரப் பிரச்னைகளை அறிவோம்!

பொருளாதாரப் பிரச்னைகளை அறிவோம்!

மாணவர்களுக்கு, பாடத்துடன் வாழ்க்கை நடைமுறைகளையும் கற்றுக்கொடுத்தல், புரிதலை எளிமையாக்கும். எங்கள் பள்ளி அருகே நடக்கும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, ஊதிய ஏற்றத்தாழ்வுகளை மாணவர்கள் உணர்ந்துகொண்டனர்.

தேவேந்திரன்: ''ஐயா வணக்கம். உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்.  நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை செய்வீங்க?''

மேஸ்திரி: ''காலையில் எட்டரை மணிக்கு வந்து, மதியம் ஒன்றரை மணிக்கு சாப்பிடப் போவோம். திரும்ப ரெண்டரை மணிக்கு வந்து, அஞ்சரை வரைக்கும் வேலை பார்ப்போம்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாஸ்கர்: ''உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம்?''

கொத்தனார்: ''எனக்கு 650 ரூபா.''

வீரச்செல்வி: (உதவியாளர்களைப் பார்த்து) ''உங்களுக்கு?''

பொருளாதாரப் பிரச்னைகளை அறிவோம்!

ஆண் உதவியாளர்: ''எனக்கு 450 ரூபா.''

பெண் உதவியாளர்(சித்தாள்): ''எங்களுக்கு 250 ரூபா.''

பாஸ்கர்: ''இவங்க என்ன வேலை செய்வாங்க?''

மேஸ்திரி: ''ரெண்டு பேருமே கொத்தனாருக்கு உதவியா எல்லா வேலைகளையும் செய்வாங்க.''

தேவேந்திரன்: அப்புறம் ஏன் ஆணுக்கு 450 ரூபாய்... பெண்ணுக்கு 250 ரூபாய்? எங்கள் பள்ளியில் ஆண் ஆசிரியருக்கு என்ன சம்பளமோ, அதேதான் பெண் ஆசிரியருக்கும். இங்கே ஏன்  வேறுபாடு?''

ஆண் உதவியாளர்: ''நாங்க சிமென்ட் மூட்டை தூக்குவோம், கலவை கலந்துகொடுப்போம்.  பெண்களால் செய்ய முடியுமா?''

லைலா:''இப்ப எல்லாம் ஆண்களுக்குச் சமமா எல்லா வேலைகளையும் பெண்கள் செய்றாங்க. அப்படிச் செய்யும்போது, அவங்களுக்கும் சமமான சம்பளத்தைக் கொடுப்பதுதானே நியாயம்?''

மேஸ்திரி: ''நீங்க சொன்னதைப் பற்றி யோசிக்கிறோம். எங்களால் முடிஞ்ச மாற்றத்தைச் செய்ய முயற்சி செய்றோம்.''  

- இரத்தின புகழேந்தி,
அ.உ.பள்ளி
மன்னம்பாடி.