Published:Updated:

முக்கோணத்தின் வகைகள் !

முக்கோணத்தின் வகைகள் !

மாணவர்களை, பல குழுக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

அவர்கள் குச்சிகள், பட்டைகள் மற்றும் ஆணிகளைக்கொண்டு முக்கோணத்தின் வகைகளைச் செய்து காட்ட வேண்டும்.

ஒவ்வொரு குழுவுக்கும் முக்கோணத்தின் வகை ஒன்றின் பெயரைச் சூட்ட வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உதாரணம்: ஒரு குழுவுக்கு, சமபக்க முக்கோணம். மற்றொரு குழுவுக்கு, இரு சமபக்க முக்கோணம். இன்னொரு குழுவுக்கு, குறுங்கோண முக்கோணம் என்று பெயர் சூட்ட வேண்டும்.

முக்கோணத்தின் வகைகள் !

ஒவ்வொரு குழுவுக்கும் சார்ட் அட்டையைத் தந்து, அந்தக் குழுவின் பெயருள்ள முக்கோணத்தை வரைந்து, அதை அழகாக வெட்டி எடுக்கச் சொல்லவும். இப்படி, எல்லாக் குழுக்களும் செய்து முடித்ததும் அனைத்து முக்கோணங்களையும் வகுப்பில், மேஜை மீது பார்வைக்கு வைக்கவும்.

பிறகு, ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவர் வந்து, தாங்கள் செய்த முக்கோணம் பற்றிக் கூற வேண்டும்.

உதாரணம்: சமபக்க முக்கோணத்தில் எல்லாப் பக்கங்களும் சமமாக இருக்கும் என்று சமபக்க முக்கோணக் குழு மாணவர் கூற வேண்டும்.

மற்ற குழுவைச் சேர்ந்தவர்கள், இந்தக் குழுவினரிடம் அவர்கள் செய்த முக்கோணம் பற்றிய சந்தேகங்களைக் கேட்கலாம். அதற்கு, அந்தக் குழு மாணவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்தச் செயல்பாடு மூலம், முக்கோணத்தின் வகைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதுடன், அந்த முக்கோணத்தின் வகை பற்றி பிழையின்றிக்  கூறவும் பழகிக்கொள்வர். கூச்சம் இன்றி மற்றவர் முன் பேசுவதால், தன்னம்பிக்கையும் வளரும்.

குழுச் செயல்பாடு, விரைந்து செய்தல், தெளிவாகப் பேசுதல் ஆகியவற்றைக்கொண்டு மதிப்பிடலாம்.

- பா.சத்தியவேல்
ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி,
பொன்பத்தி.