Published:Updated:

குரூப்-2 வினாத்தாள் இ மெயில் மூலம் திருட்டு!

Vikatan Correspondent
குரூப்-2 வினாத்தாள் இ மெயில் மூலம் திருட்டு!
குரூப்-2 வினாத்தாள் இ மெயில் மூலம் திருட்டு!
குரூப்-2 வினாத்தாள் இ மெயில் மூலம் திருட்டு!

சென்னை/தர்மபுரி: குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியானது எப்படி என்பது குறித்து  பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-1,  குரூப்-2 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் கேள்வித்தாள்கள் தமிழகத்தில் உள்ள எந்த  அச்சகத்திலும் அடிக்கப்படுவதில்லை.பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா,  கேரளா, போன்ற மாநிலங்களில் தான் அச்சடிக்கப்படுகின்றன.
 
இதே போல் குரூப்-2 தேர்வு கேள்வித்தாள்களும் வெளிமாநிலத்தில் உள்ள ஒரு  அச்சகத்தில் தான் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது.அந்த கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்பட்டு  பார்சல் செய்யப்பட்டு லாரியில் ஏற்றும் வரை அங்கு இருந்து யாரும் வெளியே செல்ல  கூடாது.மேலும் அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கும்.
 
பின்னர் அந்த கேள்வித்தாள்கள் அங்கிருந்து நேரடியாக தேர்வு மையங்களுக்கோ அல்லது   துறை தலைமை அலுவலகத்துக்கோ கொண்டு வரப்படுகிறது.இப்படி அச்சகங்களில்  இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரும் வழியில் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு  வழங்கப்படுவதில்லை என்ற கூறப்படுகிறது.
 
எனவே லாரியில் வரும் போது வழியில் திருடப்பட்டு கேள்வித்தாள் திருடப்பட்டு  இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.தற்போது போலீசில்  சிக்கியவர்கள்,வினாத்தாளை தனக்கு அவர் கொடுத்தார், இவர் கொடுத்தார் என்று தான்  சொல்கிறார்களே தவிர இதை யார் கொடுத்தார்கள் இன்று சொல்லவில்லை.
 

##~~##
மேலும் இமெயிலில் இருந்து வினாத்தாளை திருடியதாகவும் கூறப்படுகிறது.தர்மபுரி  மாவட்டம் கம்பை நல்லூர் தேர்வு மையத்தில் பிடிபட்ட சுரேஷ்குமார், விடைத்தாளும்  வைத்திருந்தார்.இந்த கேள்வித்தாள் சில மணி நேரத்துக்கு முன்பு தான் அவுட்டாகி  இருக்க வாய்ப்பு இருக்கும். முன்கூட்டியே ஆகி இருந்தால் எப்படியும் வெளியே  தெரிந்திருக்கும்.
 
மேலும் கேள்வித்தாள் அவுட் ஆன அடுத்த நிமிடத்திலேயே விடை கண்டுபிடிப்பது  கடினம்.தேர்வாணையத்தில் வேலைப்பார்ப்பவர்களால் தான் எளிதில் விடை எடுக்க  முடியும்.எனவே இந்த கேள்வித்தாள் வெளியானதில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம்  என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.