Published:Updated:

சுட்டி விகடன் எஃப்.ஏ.பக்கங்கள்.. மாணவர்களுக்கு வரப்பிரசாதம் !

வி.எஸ்.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி

சுட்டி விகடனில் மூன்று ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் FA பக்கங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது, தங்கள் பள்ளிக்கு எந்த வகையில் உறுதுணையாக இருக்கிறது என்பதைச் சொல்கிறார், மேலூர், ஆர்.சி. நடுநிலைப் பள்ளி ஆசிரியை பமேலா ஜோவிட்டா. ‘‘பாடங்களை மனப்பாடம் செய்வதை நினைத்து, கவலையிலும் பயத்திலும் தவித்த  மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்தது, தமிழக அரசின் செயல்வழிக் கற்றல் முறை. அதுகுறித்து பலருக்கும் தயக்கம் இருந்தபோது, இன்னும் எளிமையாக மாணவர்களிடம் கொண்டுசேர்த்ததில் சுட்டி விகடனின் பங்களிப்பு என்றென்றும் மறக்க முடியாதது.  தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் இந்தப் பகுதியில் பங்குபெறுவதால், மற்றவர்கள் எப்படியெல்லாம் கற்றுத்தருகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்துகொள்ள, ஒரு பாலமாக இருக்கிறது சுட்டி விகடன்” என்கிறார்.

சுட்டி விகடன் எஃப்.ஏ.பக்கங்கள்.. மாணவர்களுக்கு வரப்பிரசாதம் !

இதில் வெளியான பல செயல்பாடுகளை, தனது வகுப்பில் கற்றுத்தந்ததைப் பெருமையாகக் குறிப்பிடும் மேட்டூர் அணை, அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சி.செல்வகுமார், ‘‘வில்லுப்பாட்டு மூலம் பாடம் கற்பது எங்களுக்கு முற்றிலும் புதிதான ஒன்று. FA பக்கங்களில் வந்த வில்லுப்பாட்டைப் போல நாங்கள் புதிதாகவும் எழுதி, வகுப்பில் பாடச் செய்தோம். எங்கள் பள்ளியில் சில மாணவர்களுக்கு வாய்ப்பாடு மனதில் நிற்கவில்லை. அவர்களுக்கு, ‘எளிய வழியில் வாய்ப்பாடு’, ‘கை விரல்களில் கணக்கு’ போன்ற பகுதிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. மயங்கொலிப் பிழைகளை நீக்குவதற்காக நாடகம் ஒன்றை சுட்டி விகடனில் படித்தபோது, அதேபோல எங்கள் வகுப்புகளிலும் நடிக்கவைத்து, மாணவர்களின் உரையாடலில் இருக்கும் மயங்கொலிப் பிழைகளைச் சரிசெய்தோம்” என்று பூரிப்புடன் சொல்கிறார்.

சுட்டி விகடன் எஃப்.ஏ.பக்கங்கள்.. மாணவர்களுக்கு வரப்பிரசாதம் !

‘‘செயல்பாடுகளுக்கான படங்களுக்கு, நாங்கள் கடைகடையாகச் செல்லும் சிரமத்தைக் குறைக்கும் வகையில்,  சுட்டி விகடன் அளிக்கும் ப்ளோ-அப் படங்கள் பற்றி சொல்லியே ஆக வேண்டும். வேறு எங்கும் கிடைக்காத  படங்களை அழகாகத் தொகுத்து தருகிறது. அதுபோல பல வண்ணத்தாள்களில் அளிக்கும் ‘ஸ்கிராப் புக்’, பார்க்க ரொம்பவும் அழகாக இருக்கிறது’’ என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார்கள் மாணவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆவூர் அ.உ.நி.பள்ளி ஆசிரியை ரெ.ரமாதேவி, ‘‘பருவவாரியாக வகுப்பில் பாடம் நடத்துவதற்கு, சரியான நேரத்தில் வெளியாகும் செயல்திட்டங்கள், உரிய நேரத்தில் பயிற்றுவிக்க உதவியாக உள்ளது. செயல்திட்டங்களை வெளியிடுவதோடு, தேர்வுகளைப் பயமின்றி எதிர்கொள்வதற்கான தேர்வுக் குறிப்புகள், உடல்நலம் கெடாதிருக்க, உணவு குறித்த நலக் குறிப்புகளையும் கொடுத்து, மாணவர்களின் உடலும் மனமும் தெளிவாக இருக்க வழிகாட்டுவது சுட்டி விகடனுக்கே உரிய சிறப்பு” என்கிறார்.

சுட்டி விகடன் எஃப்.ஏ.பக்கங்கள்.. மாணவர்களுக்கு வரப்பிரசாதம் !

அக்கறையும் அர்ப்பணிப்பும் மிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு, கல்விப் பணியில் சுட்டி விகடனின் பங்களிப்பு தொடரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு