Published:Updated:

ஜஸ்குச்சியில் படகு வீடு !

அரசு மேல்நிலைப் பள்ளி, ஒண்ணுபுரம், தி.மலை

பிரீமியம் ஸ்டோரி

1. ஐஸ்குச்சியில் படகு வீடு!

ஐஸ்குச்சி மற்றும் தென்னங்குச்சிகளைப் பயன்படுத்தி, படகு மற்றும் வீடு செய்தேன். வீட்டை, படகின் மேல் பொருத்தினேன். அது, படகுவீடு ஆனது. வித்தியாசமான படைப்பு என்று அனைவரும் பாராட்டினர். மதிப்பீடும் பெற்றேன்.

- பி.எஸ்.பிரியங்கா, 8-ம் வகுப்பு.

2. பாக்டீரியா செல்

உல்லன் நூல், தெர்மக்கோல், ஜிகினா போன்றவற்றைப் பயன்படுத்தி, பாக்டீரியா செல் செய்து அசத்தினேன். வளரறி மதிப்பீட்டில் அதிக மதிப்பெண்கள் பெற்றேன்.

- என்.ஹேமலதா, 8-ம் வகுப்பு.

3. பூங்கொத்து

ஸ்பாஞ்ச் ஷீட், குச்சிகளைப் பயன்படுத்தி, ரோஜாக்கள் செய்தேன். அதில் இலைகளைப் பொருத்தினேன். அட்டைகளை வளைத்து, பேஸ் செய்து, அதில் பூக்களைப் பொருத்தி, பூங்கொத்து உருவாக்கினேன். ஆசிரியரும் சக மாணவர்களும் என்னைப் பாராட்டினர்.

- என்.ஆர்.ஹரினி, 8-ம் வகுப்பு.

ஜஸ்குச்சியில் படகு வீடு !

4. நிலக்கரி உருவாதல்!

மரங்கள் மண்ணில் புதைந்து, அழுத்தத்தால் நிலக்கரியாக மாறும்  படிநிலையைச் செய்யத் திட்டமிட்டேன். அட்டைகளைப் பயன்படுத்தி, வரிசைப்படி வைத்து, மதிப்பீடு பெற்றேன்.

- சுஜிதா, 8-ம் வகுப்பு.

5. கிளாமிடோமோனாஸ்

தெர்மக்கோல் அட்டையை வெட்டி, கிளாமிடோமோனாஸ் உருவத்தை வெட்டினேன். அதன் பாகங்களையும் தனித்தனியாகச் செய்து, அதில் பொருத்தினேன். அழகான கிளாமிடோமோனாஸ் செய்ததற்கு, சூப்பர் மதிப்பீடு கிடைத்தது.

- டி.ரூபினி, 8-ம் வகுப்பு.

6. ரங்கராட்டினம்

பிள்ளையார் சதுர்த்திக்குப் பயன்படுத்திய பிள்ளையார் குடையில், விலங்கு பொம்மைகளைக் கட்டித் தொங்கவிட்டேன். சுழற்சி இயக்கத்துக்கான ரங்கராட்டினத்தை  எளிய வழியில் செய்து, மதிப்பீடு பெற்றேன்.

- ஜீவகுமார், 8-ம் வகுப்பு.

7. 3Dநளவெண்பா!

தமிழில் நளவெண்பாவுக்காக 3டி அரண்மனை ஒன்றை உருவாக்கினேன். அந்தக் கதையின் மாந்தர்களை வரைந்து, வண்ணம் தீட்டி, தனித்தனியாக வெட்டி எடுத்தேன். அவற்றைக் குச்சிகளில் ஒட்டி, சுயம்வரக் காட்சியின் சூழ்நிலையை அமைத்தேன். அனைவரும், ‘சினிமா பார்ப்பது போல உள்ளது’ என்று பாராட்டினார்கள். தமிழ் ஆசிரியர் பாராட்டி, மதிப்பீடு அளித்தார்.

- டி.சினேகா, 8-ம் வகுப்பு.

8. அழகிய தாஜ்மஹால்!

முகலாயர் காலத்து கட்டடக் கலைக்கு உதாரணமாக, சுட்டி விகடன் தரும் க்ரியேஷன்ஸ் ஐடியா அடிப்படையில், தாள்கள் மற்றும் அட்டையைப் பயன்படுத்தி, தாஜ்மஹால் செய்தேன். முழு மதிப்பீடு பெற்றேன்.

- என்.ஜி.கவிதா, 8-ம் வகுப்பு.

9. சூப்பர் சீஸ்மோகிராஃப்!

புவி நிலநடுக்கத்தை அளவிடும் கருவி சீஸ்மோகிராஃப். அதை, துணி மற்றும் வண்ணக் காகிதங்கள்கொண்டு செய்தேன். பள்ளியிலுள்ள அனைவரின் பாராட்டுகளோடு, ஆசிரியரிடம் நல்ல மதிப்பீடும் பெற்றேன்.

- கிஷோர், 7-ம் வகுப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு