Published:Updated:

அறிவோம் அரை சுழற்சி!

அறிவோம் அரை சுழற்சி!

பிரீமியம் ஸ்டோரி

சமச்சீர் தன்மையில் அரை சுழற்சி, கால் சுழற்சி ஆகியவற்றை எளிதில் புரியவைக்க, ஒரு சில மாணவர்களை வட்டமாக நிற்கவைத்து, சுழலச் சொல்லி, அவற்றின் தன்மையைச் சொல்லலாம். அதேபோல, வடிவங்களையும் சில எழுத்துகளையும் எண்களையும் பெரிய அளவு சார்ட் அட்டையில் தயார்செய்யவும். கால் சுழற்சி, அரை சுழற்சிக்குப் பின் மாறுபடாமல் இருப்பவை எவை, மாறுபட்டுக் காணக்கூடியவை எவை என்பதை இனம்புரியச் செய்யலாம்.

சமச்சீர் தன்மையால் அழகாகக் காட்சி அளிக்கக்கூடிய இடங்களையும் பொருள்களையும்  படங்களையும் காட்டி அறியச்செய்யலாம். பெரும்பாலும், விலங்குகளின் உடலமைப்பு சமச்சீர் தன்மைகொண்டது. அவற்றின் இடப்பக்கம் மற்றும் வலப்பக்கம் கண்ணாடி பிம்பம் போன்று காணப்படும் என்பதை விலங்குகளின் மாதிரி உருவங்களை வைத்து விளக்கலாம்.

அறிவோம் அரை சுழற்சி!

இரண்டு சமச்சீர் கோடுகள்கொண்ட உருவங்கள், பல சமச்சீர்கொண்ட உருவங்கள் போன்றவற்றைப் பல்வேறு வண்ணக் காகிதங்களைக் கொடுத்து மடிக்கச் சொல்லி, அறியச்செய்யலாம். முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து, கண்ணாடியின் விளிம்புக் கோடு சமச்சீர் கோடாக மாறுவதை உற்று நோக்கச் சொல்லலாம். நிறையப் படங்களை வரைந்து சமச்சீர் கோடுகளின் எண்ணிக்கையைச் காணச்செய்யலாம்.


கோலங்கள் வரையச் சொல்லி, சமச்சீர் கோடுகளைக்கொண்டுள்ளன என்பதை உணரவைத்தல் உள்ளிட்ட பயிற்சிகளையும் அளிக்கலாம்.
 

இதில் ஈடுபடும் மாணவர்களின் ஆர்வம், புரிந்துகொள்ளும் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.

குழுவாகச் செய்யும் செயல்பாடுகளுக்கு, தங்கள் குழுவினரோடு இணைந்து செய்வதன் அடிப்படையில் கூடுதல், மதிப்பீடு அளிக்கலாம்.

- மு.முத்துலெட்சுமி
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு