Published:Updated:

உணவு சேமிப்பு வகைகள் !

உணவு சேமிப்பு வகைகள் !

பிரீமியம் ஸ்டோரி

‘உணவு’ பாடத்துக்கு விளையாட்டாகக் கற்போம் முறையில் செயல்பாடு ஒன்றைச் செய்யலாம். வீட்டில் உள்ள உணவுப் பொருள்களை ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கொண்டுவரச் சொல்லவும்.

என் வகுப்பில் மாணவர்கள் கொண்டுவந்த பொருள்கள்: வத்தல், உப்பு, சர்க்கரை, எண்ணெய், தேன், பட்டாணி, கருவாடு.
 

இவற்றில் உப்பு, சர்க்கரை, எண்ணெய், தேன் முதலியவை இயற்கையான, ஆரோக்கியமான சிறந்த உணவுப் பதப்படுத்திகள் என்பதைக் கூறினேன்.  அந்தப் பொருள்களைக் கொண்டுவந்தவர்களை தனியே நிற்கச்செய்து, சார்ட் அட்டையில் மேற்கூறிய பொருள்களைப் பட்டியலிடச் செய்தேன்.

உலர்த்துதல் மற்றும் நீர் அகற்றுதல்...

உணவு சேமிப்பு வகைகள் !

பச்சைக் காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன்கள் முதலியவற்றை சூரிய ஒளியில் உலர்த்தி, நீரை அகற்றி, கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும். உலர்த்துவதற்கு முன் உப்பிடுதல் இன்றியமையாதது. ஏனென்றால், உப்பு, நுண்ணுயிரிகளிடம் இருந்து உணவுப் பொருள்களைக் கெடாது பாதுகாக்கும்.  இந்தப் பொருள்களைக் கொண்டுவந்த மாணவர்களை, ‘உலர்த்துதல் மற்றும் நீர் அகற்றுதல் குழு’ என்று பெயரிட்டு நிற்கச் செய்தேன்.

உலரவைத்துச் சேமித்தல்... குளிரூட்டிச் சேமித்தல்!

தானியங்களையும் பயறு வகைகளையும் உலரவைத்துச் சேமித்தால், அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும். இந்தப் பொருள்களைக் கொண்டு வந்த மாணவர்களை, ‘உலரவைத்துச் சேமித்தல், குளிரூட்டிச் சேமித்தல் குழு’ என்று தனியே நிற்கச் செய்தேன்.
பிறகு, குழு மாணவர்கள் தாங்கள் கொண்டுவந்த பொருள்களைச் சேமிக்கும் முறை பற்றி, மற்ற மாணவர்களுக்கு விளக்கினர். இதுபோல நீங்களும் செய்யலாம். ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதன் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.

- கரு.செல்வமீனாள்
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு