பிரீமியம் ஸ்டோரி

இரண்டு சிறு தொட்டிகளில் கீரை விதைகளைப் பதியனிட்டு, ஒரு தொட்டியில் பசுவின் சாணத்தை எருவாக இட்டு, நீர் தெளித்துவந்தோம். இன்னொரு தொட்டியில், நீர் மட்டும் தெளித்தோம். ஒரு வாரம் கழித்து என்ன நிகழ்ந்தது என்பதை, மாணவிகளைக்கொண்டே விவாதிக்கச் செய்தோம்.

விவாதத்தின் தொகுப்பு:

எவர்சில்வர் தட்டில் இருப்பது, இயற்கை உரம் இட்டு வளர்க்கப்பட்டது. அது, உயரமாகவும் செழிப்பாகவும் வளர்ந்துள்ளது. பிளாஸ்டிக் தொட்டியில் உரம் இல்லாமல், நீர் மட்டும் ஊற்றி வளர்க்கப்பட்டது, உயரம் குறைவாகவும் வெளிர் நிறத்திலும் உள்ளது.

கீரை விதைப்போம்!

பயிர் வளர்ச்சிக்கு உரம் தேவை. பசுவின் சாணம், மண்ணின் தன்மையை மேம்படுத்தி, பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. சத்துக்குறைபாட்டால் மனிதர்கள் பாதிக்கப்படுவது போல தாவரங்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. அதனால், நோய்கள் தாக்கி உற்பத்தி பாதிக்கப்படும்.
இந்தச் செயல்பாட்டின் மூலம், பயிர் வளர்வது பற்றிய பல விஷயங்களைத் தெரிந்துகொண்டதோடு, செயல்பாட்டின் மூலம் மாணவிகள் கண்கூடாகக் கண்டனர்.

விவாதத்தில் சிறப்பாகப் பங்கெடுத்தவர்களுக்கு முழு மதிப்பீடு வழங்கப்பட்டது.

- இரத்தின புகழேந்தி,
அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு