Published:Updated:

`தனியார் பள்ளி, கல்லூரிகள் நன்கொடை வசூலிப்பு' - கடிவாளம் போடுவது சாத்தியமா?

பள்ளிக் கல்வித்துறை

பள்ளி, கல்லூரிகள் நன்கொடை வசூலிப்பதைத் தடுக்க மாணவர் சேர்க்கையின்போது பறக்கும் படை அமைத்து அரசு திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாணவர், பெற்றோர் நலச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

`தனியார் பள்ளி, கல்லூரிகள் நன்கொடை வசூலிப்பு' - கடிவாளம் போடுவது சாத்தியமா?

பள்ளி, கல்லூரிகள் நன்கொடை வசூலிப்பதைத் தடுக்க மாணவர் சேர்க்கையின்போது பறக்கும் படை அமைத்து அரசு திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாணவர், பெற்றோர் நலச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Published:Updated:
பள்ளிக் கல்வித்துறை

சென்னையில் சில தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து அறக்கட்டளையின் பெயரில் நன்கொடை வசூலித்தன. இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. பிறகு அளிக்கப்பட்ட தீர்ப்பில், 'கல்வி வழங்குதல் என்பது ஒரு புனிதமான சேவை. கல்வியை பணம் சம்பாதிக்கும் தொழிலாகப் பார்க்கக் கூடாது.

கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் நன்கொடைக்கு வருமான வரிச்சட்டப் பிரிவு 11-ன்படி வரிவிலக்கு பெற முடியாது. அந்த நன்கொடைகளுக்குக் கட்டாயம் வரி விதிக்கப்படும். மாணவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கக் கூடாது என்பதற்காகத் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பு தடைச் சட்டம் 1992-ன்படி தாமாக முன்வந்தோ, நன்கொடையாகச் செலுத்தியிருந்தாலோ அல்லது அறக்கட்டளையின் பயன்பாட்டுக்காகப் பெறப்பட்டிருந்தாலோ அது சட்டப்படிக் குற்றமாகும்.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

கல்வி நிறுவனங்கள் நன்கொடை பெறுவது சட்டவிரோதம் மட்டுமல்லாமல், தண்டனைக்குரிய குற்றமும் ஆகும். கல்வி நிறுவனங்களில் நன்கொடை இல்லாமல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். மேலும், நன்கொடை வசூலிப்பதைத் தடுக்கவும், இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இணையதளம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

அதில் எந்தெந்தக் கல்லூரிகள் நன்கொடை வசூலிக்கின்றன என்பதை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த இணையதளம் தேசிய தகவல் மையத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும். அது குறித்த விவரங்களை மாணவர் சேர்க்கையின்போது மாநில அரசுகள் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் கல்வி உரிமைக்காகச் சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

அதன்படி, மாநில அரசுகள் கல்வி வழங்காததால், அரசுப் பள்ளிகளை விட்டுவிட்டு குழந்தைகளின் பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடுவது வேதனை அளிக்கிறது. கல்வியைப் பொறுத்தமட்டில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்புக்கு கடிவாளம் போடுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் செ.அருமைநாதன், "ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகள் மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கக் கூடாது என்ற சட்டம் இடுக்கிறது. ஆனால் தொடர்ந்து வசூலித்துவருகிறார்கள். எப்படி தேர்தல் சமயத்தில் பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, அதேபோல் ஒவ்வோர் ஆண்டும் மாணவர் சேர்க்கையின்போது பறக்கும் படை அமைத்து திடீர் சோதனை நடத்த வேண்டும்.

பள்ளிக்கல்வி இயக்குனரகம்
பள்ளிக்கல்வி இயக்குனரகம்

அப்போதுதான் நன்கொடை வசூலிப்பதைப் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் நன்கொடை வாங்கிக்கொண்டுதான் இருப்பார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் நன்கொடைத் தொகை வேறுபடுகிறது. ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை வசூல் செய்கிறார்கள். பெற்றோர்கள் சீட்டு கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் புகார் அளிப்பது இல்லை.

பெற்றோர்கள் வீட்டுக்கு அருகில் நல்ல பள்ளியாக இருக்கிறது என்று அங்கு செல்வார்கள். அப்போது நன்கொடை வாங்கக் கூடாது என்று அவர்களால் சொல்ல முடியாது. மாறாக, நன்கொடைத் தொகையைச் சற்று குறைத்துக்கொள்ளுங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். வேறு எதுவும் அவர்களால் செய்ய இயலாது. இதை அரசின் பள்ளிக் கல்வித்துறைதான் தடுக்க வேண்டும்" என்றார்.