!இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று உயர்கல்வி வாய்ப்புகள் பெருகிவிட்டன. நாம் எவ்வளவு பின்தங்கிய சூழலில் இருந்தாலும் கொஞ்சம் முயன்றால் வாய்ப்புகளை எட்டிப் பிடித்துவிட முடியும். பொருளாதாரச் சிக்கல்கள் இன்று நம் கல்விப்பயணத்தில் ஒரு தடைக்கல்லே இல்லை என்ற நிலையைக் கல்விக்கடன்கள் உருவாக்கியிருக்கின்றன.

கல்விக்கடன் குறித்த பல்வேறு சந்தேகங்கள் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் உண்டு. சில அடிப்படைக் கேள்விகளுக்கு விரிவான பதில்கள் இங்கே...

கல்விக்கடனில் எவையெவை அடங்கும்?

அரசாங்கமே ஒவ்வொரு கல்லூரிக்கும் அதன் தரத்தைப்பொறுத்து கல்விக்கட்டணத்தை நிர்ணயித்திருக்கும். அந்த கட்டணத்தை 100% கல்விக்கடனாக வழங்குவார்கள். இந்த கல்விக் கடனில், கல்விக்கட்டணம், புத்தகக்கட்டணம், தேர்வுக்கட்டணம், விடுதிக்கட்டணம், விடுதியில் உணவுக்கான கட்டணம் ஆகியவை அடங்கும்.

கல்விக்கடனுக்கான வட்டிவிகிதம் என்ன... மானியம் உண்டா?

கல்விக்கடனுக்கு ஆண்டு வட்டி 12% - 13% வரை இருக்கும். கல்விக்கடன் வட்டிக்கு அரசாங்கம் மானியம் கொடுக்கிறது. வட்டிக்கான மானியம், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த மானியம் பெறுவதற்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இதற்கு வருமானச் சான்றிதழ் காட்டப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்தியதற்கான சான்றும் காட்ட வேண்டும்.

எவ்வளவு தொகைவரை கல்விக்கடன் பெறமுடியும்?

இன்று கல்விக்கடனாக 4 லட்சம் ரூபாய்வரை எவ்வித அடமானமும் இல்லாமல் பெறமுடிகிறது. இதைப்பெற பெற்றோர் உத்தரவாதம் அளித்தாலே போதும். முன்னணிக் கல்வி நிறுவனங்களில், அதிக கட்டணத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அடமானமில்லாமல் 7.5 லட்சம்வரை கல்விக்கடன் அளிக்கப்படுகிறது.

இந்த 7.5 லட்ச ரூபாய் கல்விக்கடனுக்கு மூன்றாம் நபர் உத்தரவாதமும் கேட்கப் படும். 7.5 லட்சம் ரூபாய்க்கும்மேல் கல்விக்கடன் பெறவேண்டியிருந்தால் அதற்கு வீடு, மனை போன்ற சொத்துகளை அடமானமாகக் கேட்பார்கள். இந்த வகையில் அதிகபட்சம் 25 லட்ச ரூபாய்வரை கல்விக்கடன் பெறலாம்.

கல்விக்கடனுக்கு ஆண்டு வட்டி 12% - 13% வரை. கல்விக்கடன் வட்டிக்கு அரசாங்கம் மானியம் கொடுக்கிறது. வட்டிக்கான மானியம், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப் படுகிறது. இந்த மானியம் பெறுவதற்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

கல்விக்கடனைத் திருப்பிச்செலுத்துவது எப்படி?

கல்விக்கடனைத் தவணை முறையில் திருப்பிச்செலுத்துவதற்கு அதிகபட்சம் 60 மாதங்கள் (5 ஆண்டுகள்) வழங்கப்படும். கல்லூரிப்படிப்பு முடிந்த ஆண்டிலிருந்து கூடுதலாக ஓர் ஆண்டு, வேலை தேடுவதற்காகவே வழங்கப்படும். கல்விக்கடன் தொகை அதிகமாக இருந்தால், கல்விக்கடனைத் திருப்பிச்செலுத்துவதற்கான ஆண்டும் அதிகபட்சம் 10 ஆண்டுகள்வரை அதிகரிக்கப்படும். படிப்பு முடித்து வேலையில் சேர்வதற்கு ஓர் ஆண்டுக்காலத்தையும்விட அதிகரித்தால், வங்கி மேலாளரிடம் கால அவகாசத்தை அதிகரிக்க முறையிடலாம். அதற்கான கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேலும் ஆறு மாதங்கள் கால அவகாசம் தருவதற்கு வாய்ப்புள்ளது.

கல்விக்கடன் பெற என்னென்ன ஆவணங்கள் கட்டாயம்?

10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், ஆதார் கார்டு, அப்பாவின் ஆதார் கார்டு மற்றும் வருமானச்சான்றிதழ், கல்லூரியில் இடம் கிடைத்ததை உறுதிப்படுத்த கல்லூரியிலிருந்து பெறப்படும் சான்றிதழ், வங்கிக்கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்படும்.

கல்விக்கடன் வழங்கும் வங்கியை எப்படி தேர்ந்தெடுப்பது?

கல்விக்கடன் பெற விரும்புவோர், வீட்டுக்கு அருகிலுள்ள வங்கிகளைத்தான் அணுக வேண்டுமென்று முன்பு விதிமுறை வைத்திருந் தார்கள். பின்னர், வார்டுவாரியாகப் பிரித்து, அந்தந்த வார்டுகளுக்கான வங்கிகளில் மட்டுமே கடன் பெற முடியுமென்று மாற்றினார்கள். தற்போது, கல்விக்கடன் பெறுவோர் கல்வி பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள வங்கிகளை அணுக வேண்டுமென்று வரையறுத்துள்ளார்கள். இப்படியிருந்தால்தான் அந்த கல்லூரியின் தரம் குறித்து அறிந்துகொள்வது எளிது என்பதால் இந்த விதிமுறை.

கல்விக்கடன் பெற கல்லூரிகளின் தரம் எப்படி இருக்கவேண்டும்?

5 ஸ்டார் மதிப்புபெற்ற ப்ரைம் கல்லூரிகள், நாக் கமிட்டி (NAAC) அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், கடந்த ஆண்டில் 80% இடங்கள் நிரம்பப்பெற்ற கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கே கல்விக்கடன் தர வங்கிகள் முன்வருகின்றன. தற்போது பல கல்லூரிகள், குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள், தகுதியில்லாத பேராசிரியர்கள், சரியில்லாத உள்கட்டமைப்பு வசதிகளோடு இயங்கி வருகின்றன. இத்தகைய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது கடினம். 3 ஸ்டார்களுக்குமேல் பெற்றுள்ள கல்லூரிகளுக்கு மட்டுமே கல்விக்கடன் கொடுக்க வங்கிகள் முன்வருகின்றன. எனவே கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், தரமான கல்லூரிகளில் சேர்வது மிகவும் முக்கியம்.

கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்தாமல் போனால் என்னாகும்?

வேலை கிடைக்காததால் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாமல் போக நேரிடலாம். அப்படிச் செலுத்தாமல் போகும்போது அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

அந்த நோட்டீஸுக்குப்பின் வங்கியை அணுகி, நிலவரத்தைக்கூறி, கல்விக் கடனைச் செலுத்துவதில் சிறிது சலுகையுடன் செட்டில்மென்டுக்கு வருபவர்களும் உண்டு. நோட்டீஸுக்கு மதிப்பளிக்காதபோது அவர்கள்மீது நீதிமன்றத்தின்மூலமாகவே நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல்போவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு இல்லை. திருப்பிச் செலுத்தாவிட்டால் அவர்களின் சிபில் ஸ்கோர் பாதிக்கும். வேலையில் சேர்ந்து, வாகனக்கடன், தனிநபர்க்கடன், வீட்டுக்கடன் போன்றவற்றை வாங்க வங்கியை அணுகினால் கல்விக்கடனைத் திருப்பிச்செலுத்தாதது அவர்களுக்குப் பாதகமாக அமையும். சிபில் ஸ்கோர் 750 பாயின்டுகளுக்குமேல் இருந்தால் வங்கிக்கடன் கிடைப்பதில் சிக்கல் இருக்காது. கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் இது மிகவும் கீழிறங்கிவிடும். எனவே, அந்தக் கடனை அடைத்தபின்னர், மிகுந்த சிரமத்திற்குப் பிறகுதான் அடுத்த கடன் பெறமுடியும்.