Published:Updated:

`கற்றல் திறனை அளவிட பொதுத்தேர்வு என்றுமே தீர்வாகாது!' - அரசுக்கு நன்றி சொன்ன சூர்யா

நடிகர் சூர்யா - அமைச்சர் செங்கோட்டையன்
நடிகர் சூர்யா - அமைச்சர் செங்கோட்டையன்

பொதுத் தேர்வை ரத்துசெய்ததற்காக, நடிகர் சூர்யா தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முறையை இந்தக் கல்வியாண்டிலிருந்தே அமலாகும் என்று அறிவித்தது. இதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள், எதிர்கட்சியினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பொதுத் தேர்வுகள், மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும், இது தேவையில்லாதது என்ற கருத்தை அவர்கள் முன்மொழிந்தனர். இருந்தும் தமிழக அரசு, பொதுத் தேர்வுக்கான அட்டவணை, தேர்வு மையம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்தது. ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுகுறித்து நடிகர் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில்,``படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டதில் இணைப்பது எத்தனை கடினமானதென்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத் தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் நன்றிகள் ” என்று பதிவிட்டுள்ளார். அகரம் அறக்கட்டளை மூலமாக நடிகர் சூர்யா ஏழை எளிய மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு