Published:Updated:

மீன்வளம் தொடர்பான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்

கல்விக்கட்டணத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்குக் கட்டணச் சலுகை அளிக்கப்படும். பெரும்பான்மையான வளாகங்களில் விடுதி வசதியிருக்கிறது. விடுதிச் சேர்க்கைக்கு ரூ.10000/- வைப்புத்தொகையாகப் பெறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University) கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் மீன்வளம் தொடர்பான பல்வேறு இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

படிப்புகள்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் (Fisheries College and Research Institute), திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் (Dr. M.G.R. Fisheries College and Research Institute) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு, டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் (Dr. M.G.R. Fisheries College and Research Institute) ஆகிய கல்லூரிகளில் நான்காண்டு கால அளவிலான இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் (B.F.Sc. -Bachelor of Fisheries Science) ஒவ்வொரு கல்லூரிக்கும் 40 இடங்கள் வீதம் மொத்தம் 120 இடங்கள் இருக்கின்றன.

Tamil Nadu Fisheries University
Tamil Nadu Fisheries University

நாகப்பட்டினம், வெட்டார் ஆற்று வளாகத்தில் அமைந்திருக்கும் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் (College of Fisheries Engineering) நான்காண்டு கால அளவிலான பொறியியல் பட்டப்படிப்புகளில் இளநிலை மீன்வளத் தொழில்நுட்பம் (B.Tech Fish Engg.) - 30 இடங்கள், இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் (B.Tech. Energy & Environmental Engineering) – 20 (சுயநிதி) இடங்கள் இருக்கின்றன.

சென்னை, வாணியன்சாவடியில் மீன்வள உயிர்த்தொழில்நுட்ப நிறுவனத்தில் (Institute of Fisheries Biotechnology) நான்காண்டு கால அளவிலான இளநிலை உயிர்த் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (B.Tech. Biotechnology) – 40 இடங்கள் இருக்கின்றன. சென்னை, மாதவரம் பால்வளக் காலனியில் மீன் சத்துணவு மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியில் (College of Fish Nutrition and Food Technology) நான்காண்டு கால அளவிலான இளநிலைத் உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (B.Tech. Food Technology) – 40 இடங்கள் இருக்கின்றன. சென்னை, வாணியன் சாவடியில் டிஎன்ஜேஎப்யூ மீன்வள வணிகப்பள்ளியில் (TNJFU Fisheries Business School) நான்காண்டு கால அளவிலான B.B.A. (Fisheries Enterprises Management) எனும் இளநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு – 20 இடங்கள் இருக்கின்றன. இவையனைத்தும் சுயநிதிப்பிரிவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை, மாதவரம் பால்வளக் காலனியில் மீன்வளத் தொழில்நுட்பத் துணைத்தொழில் நிறுவனத்தில் (Paraprofessional Institute of Fisheries Technology) மூன்றாண்டு கால அளவிலான இளநிலைத் தொழில்பட்டப்படிப்பு (B.Voc. Industrial Fish Processing Technology) – 25 இடங்கள், சென்னை, முட்டுக்காடுவில் மீன்வளர்ப்புத் தொழில்நுட்பத் துணைத்தொழில் நிறுவனத்தில் (Paraprofessional Institute of Aquaculture Technology) மூன்றாண்டு கால அளவிலான இளநிலைத் தொழில்பட்டப்படிப்பு (B.Voc. Industrial Aquaculture) – 30 இடங்கள், இராமநாதபுரம், மண்டபத்தில் தொழில்துறை மீன்பிடித் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Institute of Industrial Fishing Technology) மூன்றாண்டு கால அளவிலான இளநிலைத் தொழில்பட்டப்படிப்பு (B.Voc. Industrial Fishing Technology) – 20 இடங்கள், சென்னை, மாதவரம் பால்வளக் காலனியிலுள்ள நீர்வாழ் விலங்குகள் நலத்திற்கான பரிந்துரை ஆய்வகத்தில் மூன்றாண்டு கால அளவிலான இளநிலைத் தொழில்பட்டப்படிப்பு (B.Voc. Aquatic Animal Health Management) – 20 இடங்கள் இருக்கின்றன. இத்தொழில் படிப்புகள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதிநல்கையில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளாகும்.

கல்வி மற்றும் வயதுத் தகுதிகள்

Fisheries University in Nagapattinam
Fisheries University in Nagapattinam

இப்பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். B.F.Sc. மற்றும் B.Tech. (Biotechnology) பட்டப்படிப்புகளுக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் பொதுப்பிரிவில் 1. உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம், 2. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் அல்லது தொழில்பிரிவில் பொதுப்பிரிவினர் – 55%. பிசி/பிசிஎம் – 50%, எம்பிசி/டிஎன்சி – 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் தேர்ச்சி அடைந்திருந்தால் போதுமானது. B.F.Sc. பட்டப்படிப்பிற்கு வேளாண்மை அல்லது மீன்வளம் தொழிற்பிரிவில் படித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும். இப்பிரிவில் படித்தவர்கள் 1. உயிரியல் பாடம், 2. வேளாண்மை அல்லது மீன்வளம் தொழிற்பிரிவில் கருத்தியல் மற்றும் செய்முறைப் பாடங்கள் ஆகியவற்றில் மேற்காணும் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

B.Tech. (Fisheries Engineering) மற்றும் B.Tech. (Energy & Environmental Engineering) படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணினி அறிவியல் பாடத்தில் மேற்காணும் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். B.Tech. (Food Technology) படிப்பிற்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் மேற்காணும் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். B.B.A. (FEM) பட்டப்படிப்பிற்கு அனைத்துப் பாடங்களிலும் சேர்த்து மேற்காணும் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

B.Voc. எனும் தொழில் படிப்பிற்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிந்தால் போதுமானது. இத்தொழில் படிப்புக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும். இருப்பினும், அவர்கள் +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் பெற்ற மதிப்பெண்களேக் கணக்கிடப்படும்.

B.Voc. எனும் தொழில் படிப்பு தவிர, மற்ற படிப்புகள் அனைத்திற்கும் இப்படிப்புகளில் சேர்பவர்கள் +2 வில் இரு அமர்வுகளுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மூன்று அமர்வுகளுக்குள்ளும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்படிப்பில் சேர எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பு ஏதுமில்லை. பிற பிரிவினர்களுக்கு 1-7-2021 அன்று 21 வயது நிரம்பியிருக்கக் கூடாது. மாற்றுத்திறனாளி 26 வயது நிரம்பியிருக்கக் கூடாது.

இட ஒதுக்கீடு

தூத்துக்குடி மற்றும் பொன்னேரி கல்லூரிகளிலிருக்கும் B.F.Sc. பட்டப்படிப்புக்கான 80 இடங்களில் புதுதில்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுவின் (Indian Council of Agricultural Research - ICAR) ஒருங்கிணைப்பில் நடத்தப்படும் அனைத்திந்திய மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (All India Entrance Examination for Admission - AIEEA) வழியிலான மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று, B.Tech. (Biotechnology) மற்றும் B.B.A. (FEM) படிப்புகளுக்கான இடங்களில் 15% பிற மாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Education
Education
Pixabay

மேற்காணும் ஒதுக்கீடு தவிர்த்த, பிற இடங்களுக்கு பொதுப்பிரிவு – 31%, பிசி – 26.5%, பிசிஎம் – 3.5%, எம்பிசி / டிஎன்சி – 20%, எஸ்சி – 15%, எஸ்சிஏ – 3%, எஸ்டி - 1% என்கிற தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, விடுதலைப் போராட்ட வீரர்களின் குழந்தைகள், முன்னாள் படைவீரர் குழந்தைகள் போன்ற பிரிவினருக்கும் குறிப்பிட்ட சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. இதே போன்று, வெளிநாட்டினர். வெளிநாடு வாழ் இந்தியர், அந்தமான் மற்றும் நிகோபர் தீவு மாணவர்கள், காஷ்மீர் பண்டிட் / காஷ்மீர் இந்து சமயத்தவர் போன்ற சில சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களும் இருக்கின்றன. இட ஒதுக்கீடு தொடர்பான மேலும் கூடுதல் தகவல்களைத் தகவல் குறிப்பேட்டில் படித்து அறிந்து கொள்ளலாம்.

CAT 2021: மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு... விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பம்

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தின் www.tnjfu.ac.in இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் (Online Application) விண்ணப்பிக்கலாம். மேற்காணும் பல்வேறு படிப்புகளில் B.Voc. எனும் தொழில் படிப்புக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250/-, பிற பிரிவினர்கள் ரூ.500/- என்றும், மற்ற படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.400/-, பிற பிரிவினர்கள் ரூ.800/- என்றும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19-9-2021

மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு

Admission open in Fisheries University
Admission open in Fisheries University

விண்ணப்பித்தவர்களில் +2 தேர்வில் மேற்காணும் பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரப்பட்டியல் வெளியிடப்பட்டு, இணையவழிக் கலந்தாய்வு மூலம் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவர். இணைய வழியிலான கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்களில் எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி பிரிவினர் ரூ.500/- பிற பிரிவினர் ரூ.1000/- என்று கலந்தாய்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். கலந்தாய்வின் வழியாக மாணவர் சேர்க்கை முழுமையாக நிறைவு செய்யப்படும்.

கல்விக்கட்டணம்

B.F.Sc. மற்றும் B.Tech. (Fish. Engineering) படிப்புகளுக்கு முதல் பருவத்திற்கு ரூ.15,575 என்றும், 2, 4, 6-வது பருவங்களுக்கு ரூ.10,650 என்றும், 3, 5, 7-வது பருவங்களுக்கு ரூ.11,000 என்றும், 8வது பருவத்திற்கு ரூ.7,800 என்றும் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். B.F.Sc. சுயநிதிப்பிரிவின் முதல் பருவத்திற்கு ரூ.90,575 என்றும், 2, 4, 6-வது பருவங்களுக்கு ரூ.85,650 என்றும், 3, 5, 7-வது பருவங்களுக்கு ரூ.86,000 என்றும், 8வது பருவத்திற்கு ரூ.82,800 என்றும் கல்விக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

CUCET 2021: மத்திய பல்கலைக்கழகப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு - ஒரு முழுமையான வழிகாட்டல்!

B.Tech பட்டப்படிப்பில் Biotechnology, Food Technology, Energy and Environmental Engineering மற்றும் B.B.A. (FEM) பட்டப்படிப்புகளுக்கு சுயநிதிப்பிரிவுக் கட்டணமாக, முதல் பருவத்திற்கு ரூ.55,575 என்றும், 2, 4, 6-வது பருவங்களுக்கு ரூ.50,650 என்றும், 3, 5, 7-வது பருவங்களுக்கு ரூ.51,000 என்றும், 8வது பருவத்திற்கு ரூ.47,800 என்றும் கல்விக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும். B.Voc. எனும் தொழில்படிப்புகளுக்கு முதல் பருவம் – ரூ.10,000, 2, 4, 6-வது பருவம் – ரூ.7,850, 3, 5-வது பருவம் – ரூ.8,300 என்று கல்விக்கட்டணத்தைச் செலுத்திட வேண்டும்.

மீன்வளப் பல்கலைக்கழகம்
மீன்வளப் பல்கலைக்கழகம்
கல்விக்கட்டணத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்குக் கட்டணச் சலுகை அளிக்கப்படும். பெரும்பான்மையான வளாகங்களில் விடுதி வசதியிருக்கிறது. விடுதிச் சேர்க்கைக்கு ரூ.10,000/- வைப்புத்தொகையாகப் பெறப்படுகிறது. உணவுவிடுதிக்கான கட்டணத்தை பங்கீட்டு முறையில் செலுத்த வேண்டியிருக்கும்.

கூடுதல் தகவல்கள்

இப்படிப்புகளில் சேர்வதற்கான மேலும் கூடுதல் தகவல்களை அறிய, www.tnjfu.ac.in எனும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது 04365-256430 எனும் தொலைபேசி எண்ணிலும், 9442601908 எனும் அலைபேசி எண்ணிலும் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம். ugadmission@tnjfu.ac.in எனும் மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு