Published:Updated:

எம்.இ, எம்.டெக் படிப்பு மட்டும் போதாது! பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்குப் புதிய தகுதிப் படிப்பு

பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணிபுரிய விரும்புவோருக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) புதிய ஓராண்டு சிறப்புப் படிப்பை அறிமுகப்படுத்த இருக்கிறது.

Anna University
Anna University

பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை மேம்படுத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாகப் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசியர்களுக்கு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளன.

Vikatan

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர் அனில் தத்தாத்ரேயா சஹஸ்ரபுதே இதைத் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், ``பொறியியல் கல்லூரிகளில் பேராசியர்களாகப் பணியாற்ற முதுநிலை பொறியியல் படிப்புகள் படித்திருந்தால் மட்டும் போதாது.

இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட உள்ள 8 பிரிவுகள் (8 modules) கொண்ட சிறப்புப் படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றால்மட்டுமே அவர்கள் பொறியியல் கல்லூரிகளில் பேராசியர்களாகப் பணியாற்ற முடியும்'' என்றார்.

Anil Sahasrabudhe
Anil Sahasrabudhe

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி பொறியியல் கல்லூரிகளில் பேராசியர்களாகப் பணியாற்ற பொறியியல் பாடப்பிரிவுகளில் முதுநிலைப் படிப்பு அல்லது முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை நிறைவு செய்திருந்தால் போதுமானது.

ஆனால், விரைவில் கொண்டுவரப்படவுள்ள புதிய விதிமுறைகளின்படி முதுநிலை பொறியியல் படிப்புகளை முடித்திருந்தாலும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கொண்டுவரும் ஓராண்டு படிப்பை முடித்தால் மட்டுமே பேராசியர்களாகப் பணியாற்ற முடியும்.

Engineering Counselling
Engineering Counselling
Vikatan

இதுதொடர்பாக மேலும் பேசிய அனில் டி சஹஸ்ரபுதே, ``இந்தப் புதிய படிப்பு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படும் பி.எட் படிப்பு போன்றதே. பேராசியர்களாகப் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகள் எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலும், வகுப்பறையில் அவர்களின் கற்பித்தல் திறன் சோதிக்கப்பட்ட பின்னரே அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். ஏற்கெனவே பேராசிரியர்களாகப் பணியாற்றுபவர்கள், பதவி உயர்வு பெற்று அடுத்தநிலைக்குச் செல்ல வேண்டுமானால், இந்தப் புதிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.