Published:Updated:

`எந்தப் படிப்புக்கு எதிர்காலம்?’- விகடன் வெபினாரில் கல்வியாளர் நெடுஞ்செழியனோடு நீங்கள் உரையாடலாம்!

கல்வியாளர் நெடுஞ்செழியன்
கல்வியாளர் நெடுஞ்செழியன்

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு கல்விக் குழுக்களில் நிபுணர்களுடன் பணியாற்றிய பரந்த அனுபவம் அவருக்கு உண்டு. கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் ஒன்றிணைத்துக் கல்வி ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

வழக்கமாக, பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களும் பெற்றோரும் பரபரப்பாக கல்லூரிகளைத் தேடும் காலம். என்ன படிப்பது, படிப்பை எப்படி தேர்வு செய்வது, கல்லூரியை எப்படி தேர்வு செய்வது என்றெல்லாம் பரபரப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். கொரோனா வைரஸ் எல்லாவற்றையும் முடக்கிவிட்டது.

விகடன் கல்வி எக்ஸ்போ
விகடன் கல்வி எக்ஸ்போ

எப்போது கோரோனா தாக்கம் குறையும், கல்விச்சூழல் எப்போது சரியாகும் என்று பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்தநிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களின் குழப்பத்தைப் போக்கும்வகையில் ஆனந்தவிகடன் ``மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ" ஒன்றை நடத்துகிறது. மே 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் இணைய வழியில் நடைபெறும் இந்தக் கல்விக் கண்காட்சியில், தமிழகத்தின் பிரபல கல்வியாளர்களும் தன்னம்பிக்கைப் பேச்சாளர்களும் பங்கேற்று இணைய வழியிலேயே மாணவர்களுடனும் பெற்றோருடனும் உரையாட இருக்கிறார்கள்.

உங்களுடைய பங்கேற்பைப் பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்.

மே 9ம் தேதி நடக்கும் வெபினாரில் கல்வியாளர் நெடுஞ்செழியன் 'கல்வியும் கொரோனாவும்' என்ற தலைப்பில் உரையாடுகிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய நெடுஞ்செழியன்,``தற்போதைய நிலையில் மாணவர்களுக்கு அவசியமான கல்வி எது என்பது முக்கியமான கேள்வி. இந்தச்சூழலுக்குத் தேவையான வாழ்வியல் கல்வியை உயர்கல்வி நிறுவனங்கள் வழங்குவதுதான் சரியான அணுகுமுறை. உலகத்தின் எந்த மூலைக்கு மாணவர்கள் சென்றாலும் ஏற்படக் கூடிய சிக்கல்களை எதிர்கொள்ளும் கல்வியை மாணவர்களுக்கு வழங்கவேண்டும். அது வெறும் மதிப்பெண் அடிப்படையானது அல்ல.

விகடன் கல்வி எக்ஸ்போ
விகடன் கல்வி எக்ஸ்போ

கொரோனா போன்ற பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்கள் வாழ்வியல் கல்வியைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியான அணுகுமுறை. அப்படியான பாடப்பிரிவுகள் என்னென்ன? எந்தெந்த கல்லூரிகளில் அந்தப் பாடப்பிரிவுகள் உள்ளன? அதற்கான நுழைவுத் தேர்வுகளை எவ்வாறு அணுகுவது என்பது போன்ற பல விஷயங்களை மாணவர்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்" என்கிறார் நெடுஞ்செழியன்.

கல்வியாளர் டி.நெடுஞ்செழியன், இந்தியா காலேஜ் ஃபைண்டர்' என்ற சமூகத் தொழில் முனைவோர் கல்வி அமைப்பை நடத்தி வருகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு கல்விக் குழுக்களில் நிபுணர்களுடன் பணியாற்றிய பரந்த அனுபவம் அவருக்கு உண்டு. கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் ஒன்றிணைத்துக் கல்வி ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

விகடன் கல்வி எக்ஸ்போ
விகடன் கல்வி எக்ஸ்போ

இவருடைய ஆலோசனைகளைப் பெற்ற பல மாணவர்கள் மிக உயர்ந்த இடத்தை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கீழே உள்ள லிங்கில் உங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துகொண்டு கேள்விகளோடு தயாராகுங்கள் மாணவர்களே... கல்வியாளர் டி.நெடுஞ்செழியனோடு நேருக்கு நேர் உரையாடலாம்.

உங்களுடைய பங்கேற்பைப் பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு