Published:Updated:

விரல் நுனியில் விடை... கணக்குடனான பிணக்கைத் தீர்க்க வழிகாட்டும் வேதிக் மேத்ஸ் பயிற்சி!

4வது வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சி ஆங்கில வழியில் நடத்தப்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

’கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும்’
ரஜினியின் ஹிட் படமான ‘அண்ணாமலை’யில் ராதாரவி அடிக்கடி பேசும் வசனம் இது. இதைக் கொஞ்சம் மாற்றி ’கூட்டிக் கழிச்சுப் பாருங்க, கணக்கு ஈஸியா வரும்’ என்கிறது ஆனந்த விகடன்.

யெஸ், மிக சுவாரஸ்யமாக, விளையாட்டாக உங்கள் பிள்ளைகள் கணக்கு கற்றுக்கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது உங்கள் ஆனந்த விகடன்.வேதிக் மேத்ஸ் முறையை பயன்படுத்தி எளிமையாக கணிதம் கற்க உதவும் பிரைன்கார்வ் நிறுவனமும் ஆனந்த விகடனும் இணைந்து நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வரும் அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாள்கள் நடக்க இருக்கின்றன. (நேரம் மாலை 6 முதல் 7 மணி வரை) பயிற்சிக் கட்டணம் ரூ.500 மட்டுமே.

வேதிக் மேத்ஸ்
வேதிக் மேத்ஸ்
4வது வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சி ஆங்கில வழியில் நடத்தப்படும்.

’நொடிப் பொழுதில் கூட்டிக் கழித்து விடை காணும் உத்திகள்’, ’நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி’, ’மனப்பாடம் செய்யாமல் ஒரு விஷயத்தை மனதில் நிறுத்த உதவும் மெமரி டெக்னிக்ஸ்’ போன்றவை இந்தப் பயிற்சிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்கிறார் பிரைன்கார்வ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பரமேஷ்வரி.

உங்களது பிள்ளைகள் கணக்கை விளையாட்டாகக் கற்று விரல் நுனியில் விடை சொல்லத் தயார்தானே?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு