Published:Updated:

முறைகேடுகளால் நிறுத்தப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் : அண்ணா பல்கலைக்கழகம் மறுதேர்வை அறிவித்தது!

அண்ணா பல்கலைக்கழகம்

செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக பிப்ரவரி மாதம் நடந்த தேர்வுக்கு பதிலாக மறுதேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.

முறைகேடுகளால் நிறுத்தப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் : அண்ணா பல்கலைக்கழகம் மறுதேர்வை அறிவித்தது!

செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக பிப்ரவரி மாதம் நடந்த தேர்வுக்கு பதிலாக மறுதேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.

Published:Updated:
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றிருக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. இணைய வழியாக சுமார் 4 லட்சம் மாணவர்கள் இந்த செமஸ்டர் தேர்வுகளை எழுதினர்.

இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் சுமார் ஒரு லட்சம் பேரின் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் (With held - WH), சுமார் 30 ஆயிரம் பேர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வு முடிவுகளில் தெரிவித்திருந்தது. மீதமுள்ள 30 சதவிகிதம் பேரும் மிகக் குறைந்த மதிப்பெண் சதவிகிதத்திலேயே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்பிரச்னை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக பிப்ரவரி மாதம் நடந்த தேர்வுக்கு பதிலாக மறுதேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் மறுதேர்வு குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வரும் ஜூன், ஜூலை மாதங்களில் செமஸ்டர் மறுதேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படும். 24.05.2021 முதல் 03.06.2021 வரை தேர்வில் பங்கெடுப்பதற்கு பல்கலைக்கழக இணையப் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளுக்கு ஏற்கெனவே பதிவு செய்து, தேர்வுக் கட்டணம் செலுத்தியிருக்கும் மாணவர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், நிர்ணயிக்கப்பட்ட படிப்பு காலத்தைத் தாண்டிவிட்டவர்கள், தேர்வு எழுதும் ஒவ்வொரு தாளுக்கான தேர்வுக் கட்டணத்தோடு, ஒருமுறை சிறப்புக் கட்டணமாக ரூ. 5,000 செலுத்த வேண்டும்; மற்றவர்கள் ஒவ்வொரு தாளுக்கும் வழக்கமான கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது.

14.06-2021 தொடங்கி 10.07.2021 வரை நடைபெறும் இளநிலை, முதுநிலைத் தேர்வுகள் 2017-ம் ஆண்டுப் பாடத்திட்டத்தின் கீழும், 14.06.2021 முதல் 16.07.2021 வரை நடைபெறும் முதுநிலைத் தேர்வுகள் 2013-ஆம் பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பாடத்திட்டங்களின் கீழ் நடைபெறும் இளநிலை, முதுநிலைத் தேர்வுகள் 21.06.2021 தொடங்கி 30.07.2021 வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள்
தேர்வுகள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism