Published:Updated:

`பதநீர் விற்று ஆசிரியைகளுக்கு சம்பளம் கொடுக்குறோம்!' - பனை மூலம் `கல்வி நிதி' சேர்க்கும் கிராமம்

ஆர்.சி.நடுநிலைப்பள்ளி

கோடைக்காலத்தில் பதநீர் விற்று பொருளாதாரம் ஈட்டுபவர்கள் உண்டு. ஆனால், பதநீரை விற்பனை செய்து கிராமத்திலுள்ள பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு ஊதியம் வழங்குவதற்காக `கல்வி நிதி' சேர்த்து வருகிறது ஒரு கிராமம் என்பது நெகிழ்ச்சியான செய்தி!

`பதநீர் விற்று ஆசிரியைகளுக்கு சம்பளம் கொடுக்குறோம்!' - பனை மூலம் `கல்வி நிதி' சேர்க்கும் கிராமம்

கோடைக்காலத்தில் பதநீர் விற்று பொருளாதாரம் ஈட்டுபவர்கள் உண்டு. ஆனால், பதநீரை விற்பனை செய்து கிராமத்திலுள்ள பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு ஊதியம் வழங்குவதற்காக `கல்வி நிதி' சேர்த்து வருகிறது ஒரு கிராமம் என்பது நெகிழ்ச்சியான செய்தி!

Published:Updated:
ஆர்.சி.நடுநிலைப்பள்ளி

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ளது அந்தோணியார்புரம். கடந்த 19 ஆண்டுகளாகப் பதநீர் விற்று பள்ளி நிதிக்காகப் பணம் சேர்த்து வருகிறார்கள் கிராம மக்கள். அந்தோணியார்புரம் கிராமத்தைச் சுற்றிலும் அடர்ந்திருக்கிறது பனைமரங்கள். இவைதான் இந்த கிராமத்துக்கே அடையாளம். கிராமத்துக்குள் நுழையும் இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது ஊர் நலக் கமிட்டியின் பதநீர் விற்பனைக்கடை. பதநீர் விற்பனைக் கடையில் பதநீர் விற்பனையில் மும்மரமாக இருந்த ஊர்த் தலைவர் சிலுவை அந்தோணியைச் சந்தித்துப் பேசினோம்.

பதநீர் விற்பனைக்கடை
பதநீர் விற்பனைக்கடை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பதநீர் குடிக்க வந்திருந்தவர்களுக்கு பதநீரைக் கொடுத்துவிட்டு, நம்மிடம் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ``எங்க கிராம மக்களோட முக்கியத் தொழிலே பனை ஏறுறதும், கருப்பட்டி காய்ச்சுறதும்தான். வீட்டுக்கு ஒருத்தர் பனை மரம் ஏறுற ஆளாத்தான் இருப்பாங்க. ஆனா, பனை மரங்களோட எண்ணிக்கை குறைஞ்சிட்டதுனாலயும், வருஷத்துல அஞ்சு மாசம்தான் பனைத்தொழில் இருக்கு என்பதாலயும், மீதமுள்ள ஏழு மாசம் வேற தொழிலைத் தேடி ஓட வேண்டியதா ஆகிடுச்சு. இதனாலேயே பனை ஏறுபவர்களின் எண்ணிக்கையும் குறைஞ்சு போச்சு'' என்றவர், தங்கள் ஊர் பள்ளி பற்றி சொன்னார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``எங்க கிராமத்துப் பிள்ளைங்க படிப்புக்காக அடுத்த கிராமத்துக்குப் போக வேண்டிய சூழ்நிலை இருந்ததுனால, கடந்த 1940-ம் வருஷம், ஊர் மக்கள் ஒண்ணா சேர்ந்து `ஆர்.சி. தொடக்கப்பள்ளி’யைத் தொடங்கியிருக்காங்க. பிறகு எங்களோட முயற்சியால 2003-ம் ஆண்டு பள்ளியில 6 முதல் 8-ம் வகுப்புவரை தொடங்கினோம். இந்தப் பள்ளி கடந்த 19 வருஷமா நடுநிலைப்பள்ளியா செயல்பட்டுகிட்டு வருது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை 136 மாணவர்கள், 6 முதல் 8-ம் வகுப்பு வரை 84 மாணவர்கள்னு மொத்தம் இப்போ 220 மாணவர்கள் படிக்கிறாங்க.

பதநீர் விற்பனைக்கடை
பதநீர் விற்பனைக்கடை

பள்ளியில மொத்தம் 6 ஆசிரியைகள் இருக்காங்க. இதுல தொடக்கப்பள்ளிக்கு வகுப்பு எடுக்குற 3 ஆசிரியைகளுக்கு மட்டும்தான் அரசு சம்பளம் கொடுக்குது. நடுநிலைப் பள்ளிக்கு வகுப்பு எடுக்கிற மீதமுள்ள 3 ஆசிரியைகளுக்கு மாதம்தோறும் ரூ.10,000 சம்பளம், ஊர்நலக் கமிட்டியில இருந்து கொடுக்கிறோம். ஆசிரியைகளின் இந்தச்க்கி சம்பளம், கரன்ட் பில், பள்ளி நிர்வாகச் செலவு ஆகியவற்றுக்காகத்தான் பதநீர் விற்று `கல்வி நிதி’ என்ற பெயர்ல ஒவ்வொரு வருஷமும் பணம் சேர்த்துட்டு வர்றோம்'' என்றபோது ஆச்சர்யப்பட்டுப்போனோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்தார் சிலுவை அந்தோணி. ``எங்க கிராமத்துல பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான குளத்தைச் சுற்றிலும் சுமார் 2,000 பனைகள் வரை இருக்குது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரைதான் எங்க பகுதியில பனை சீஸன் காலம். இதுல மே, ஜூன் , ஜூலை ஆகிய மூணு மாசம் பதநீர் வரத்து அதிகமா இருக்கும். பிறகு, படிப்படியா குறையா ஆரம்பிச்சுடும். எங்க கிராமத்தைச் சேர்ந்த 15 பனை ஏறும் தொழிலாளர்கள் தினமும் இந்த மரங்கள்ல ஏறி பதநீர் இறக்குவாங்க.

பதநீர்
பதநீர்

அந்தப் பதநீர் எல்லாத்தையும் ஊர் கமிட்டி சார்பில் மொத்தமாகப் பணம் கொடுத்து வாங்கிடுவோம். ஒரு லிட்டர் பதநீரை 90 ரூபாய்க்கு விற்பனை செய்யுறோம். தினமும் 150 லிட்டர்ல இருந்து 250 லிட்டர் வரைக்கும் பதநீர் விற்பனையாகுது. காலை 7 மணியில இருந்து மதியம் 12 மணி வரைக்கும் பதநீர் விற்பனை இருக்கும். 12 மணிக்குப் பிறகு, விற்பனையாகாம மிஞ்சின பதநீரை கருப்பட்டியாகக் காய்ச்சி ஒரு கிலோ கருப்பட்டி ரூ.300-ல இருந்து ரூ.350 வரைக்கும் விற்பனை செய்யுறோம்.

இந்தப் பதநீர் விற்பனைக் கடைக்கு ரெண்டு பேர், கருப்பட்டி காய்ச்ச ரெண்டு பேர்னு மொத்தம் நாலு பேருக்கு தினசரி கூலி போக மீதமுள்ள தொகையைக் கல்வி நிதிக்கு வரவு வச்சுக்குவோம். அஞ்சு மாத பதநீர் விற்பனையில ரெண்டு லட்சம் ரூபாய்ல இருந்து ரெண்டரை லட்சம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். அதை அப்படியே பள்ளிக் கணக்கில் வங்கியில் டெப்பாசிட் செய்து அதன் மூலம் மாதம் மாதம் ஆசிரியைகளுக்குச் சம்பளம் கொடுக்கிறோம்.

பதநீர் சுமந்து வரும் பெண்
பதநீர் சுமந்து வரும் பெண்

பள்ளி நிர்வாகச் செலவுகளையும் சமாளிக்கிறோம். கல்விச் செலவு தவிர ஊரோட வேற எந்தவொரு தேவைக்காகவும் இந்த தொகையில ஒரு ரூபாய்கூட எடுத்துச் செலவழிக்கிறதில்ல. கஷ்டப்பட்டு மரம் ஏறி இறக்குற பதநீரை கல்விக்காக எங்ககிட்ட குறைந்த விலைக்கு விற்கும் பனை ஏறுபவர்களும், ஊர் மக்களும்தான் இந்த கல்வி நிதி சேருவதற்கு முக்கியக் காரணம்’’ என்றார்.

பிள்ளைகளின் கல்விக்காக ஊர் மக்களின் ஒப்பற்ற ஏற்பாடு, அதற்குக் கைகொடுக்கும் பனம் ஏறும் தொழிலாளர்கள், விற்பனையில் ஆதரவளிக்கும் ஊர்மக்கள் என... எத்துணை நெகிழ்ச்சி, எத்துணை மகிழ்ச்சி `கல்வி நிதி'க்குப் பின்னுள்ள இந்தக் கதையில். கற்பகத் தருவான பனை மரத்தின் பதநீரால் இனிக்கிறது மாணவர்களின் கல்வி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism