Published:Updated:

முதுநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு (M.Ed) மாணவர் சேர்க்கை... விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதுநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு
முதுநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு (M.Ed) மாணவர் சேர்க்கை அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் முதுநிலைக் கல்வியியல் (M.Ed) பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கல்லூரிகள்

தமிழ்நாட்டில் சென்னையில் மேம்படுத்தப்பட்ட கல்வியியல் ஆய்வு நிறுவனம் (தன்னாட்சி) (Institute of Advanced Study in Education (Autonomous)) – 50 இடங்கள், வில்லிங்டன் பெருமாட்டி மேம்படுத்தப்பட்ட கல்வியியல் ஆய்வு நிறுவனம் (Lady Willingdon Institute of Advanced Study in Education, Chennai) – 50 இடங்கள், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி (Government College of Education) – 50 இடங்கள், புதுக்கோட்டை, அரசு கல்வியியல் கல்லூரி (Government College of Education) – 50 இடங்கள், கோயம்புத்தூர் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி (Government College of Education for Women) – 50 இடங்கள், வேலூர், அரசு கல்வியியல் கல்லூரி (Government College of Education) – 50 இடங்கள் என்று மொத்தம் ஆறு அரசு கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம் 300 முதுநிலைக் கல்வியியல் (M.Ed) பட்டப்படிப்பு இடங்கள் இருக்கின்றன.

முதுநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு
முதுநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு

கல்வித் தகுதி

இளநிலை அல்லது முதுநிலைப் பட்டத்துடன் இளநிலைக் கல்வியியல் பட்டம் (B.Ed) பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இட ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறையினைப் பின்பற்றி ஓசி – 31%, பிசி – 26.50%, பிசி (முஸ்லீம்) – 3.50%, எம்பிசி (வன்னியர்) – 10.50%, எம்பிசி மற்றும் டிஎன்சி – 7%, எம்பிசி – 2.50%, எஸ்சி – 15%, எஸ்சி (அருந்ததியர்) – 3.00%, எஸ்டி – 1% எனும் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள்

முன்னாள் படைவீரர்கள் குழந்தைகள் 1% இடங்கள், விடுதலைப்போராட்ட வீரர்களின் குழந்தைகள் 1% இடங்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர், ஐந்து வகையான மாற்றுத் திறனாளிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிற்கும் 1% இடங்கள் வீதம் 5% இடங்களும், விளையாட்டுப் பிரிவில் சிறப்புத் தகுதி பெற்றவர்களுக்கு 10 இடங்கள் எனும் அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கும்.

விண்ணப்பப் பதிவு

தமிழ்நாடு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலைக் கல்வியியல் (M.Ed) பட்டப்படிப்புச் சேர்க்கைக்கான https://www.tngasaedu.in/ அல்லது https://www.tngasaedu.org/ எனும் இணையதளங்களில் ஏதாவது ஒன்றில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர் பதிவு, விண்ணப்பம் உள்ளீடு, கல்லூரிகள் தேர்வு, விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து அச்சிடுதல், சான்றிதழ்கள் பதிவேற்றம் என்று விண்ணப்பம் சமர்ப்பிக்க ஆறு படிநிலைகளை நிறைவு செய்திட வேண்டும். இணைய வழியில் சமர்ப்பிக்க இயலாதவர்கள், மேற்காணும் ஆறு கல்லூரிகளில் ஏதாவதொன்றிக்கு நேரில் சென்று, அங்குள்ள மாணவர் சேர்க்கை மையம் வழியாகவும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

முதுநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு
முதுநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு

விண்ணப்பத்தில் தாங்கள் சேர்க்கை பெற விரும்பும் கல்லூரிகள் குறித்த தகவல்களை வரிசைப்படுத்தி வழங்கிட வேண்டும். பொதுப்பிரிவினர் ரூ.60/- என்றும், எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி பிரிவினர் ரூ.2/- என்றும் விண்ணப்பக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்திட வேண்டும்.

விண்ணப்பம் பதிவு செய்யக் கடைசி நாள்: 13-10-2021.
ரசிய மொழியை குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ளலாம்... அதற்கான தனிப்பயிற்சி மையங்களில் இணைவது எப்படி?!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தரவரிசைப்பட்டியல்

இணையதளம் வழியாகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களது இளநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களது தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, மேற்காணும் முகவரிகளிலான இணையதளங்களில் வெளியிடப்படும்.

அதன் பிறகு, விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்த கல்லூரிகளின் விருப்ப வரிசையின் அடிப்படையில், தரவரிசைக்கு ஏற்றபடி, தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கைக்கான ஆணை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட, ஒதுக்கீட்டு ஆணையின் அடிப்படையில் அந்தந்த கல்லூரிகளுக்குச் சென்று சேர்க்கையினை உறுதி செய்து கொள்ள வேண்டும். கல்லூரிகளில் இருக்கும் விடுதி வசதிகள் குறித்த தகவல்கள், இணையதளத்தில் இடம் பெற்றிருக்கும் தகவல் குறிப்பேட்டில் தரப்பட்டிருக்கின்றன.

முதுநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு
முதுநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு

கூடுதல் தகவல்கள்

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் முதுநிலைக் கல்வியியல் (M.Ed) பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய, https://www.tngasaedu.in/ அல்லது https://www.tngasaedu.org/ எனும் இணைய முகவரியில் இடம் பெற்றிருக்கும் இணையதளத்தில் மாணவர்களுக்கான தகவல்கள் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் அல்லது “கல்லூரிக் கல்வி இயக்குநரகம், ஈ.வி.கே. சம்பத் கட்டிடம், கல்லூரி சாலை, சென்னை - 600006” எனும் முகவரியிலுள்ள அலுவலகத்திற்கோ அல்லது அருகிலுள்ள மேற்காணும் ஆறு கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மாணவர் சேர்க்கை மையங்களுக்கோ நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம் அல்லது அலுவலக வேலை நாள்களில் 044- 28260098, 28271491100 எனும் உதவி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு