Published:Updated:

`Ph.D. மாணவியருக்கு பேறுகால விடுப்பு' நன்றியுடன் வரவேற்கிறேன் - பேராசிரியர் பர்வீன் சுல்தானா!

பர்வீன் சுல்தானா
News
பர்வீன் சுல்தானா

இனி பெண்கள் எக்காரணம் கொண்டும் கல்வியை கைவிடாமல் இருக்கும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ( UGC ) , ஒரு பயனுள்ள அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது

பெண்கள் இளநிலை, முதுநிலை படிப்பு படிக்கும் போதே திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் பெண்கள் நிறைய பேர் பேறுகால விடுப்பை எண்ணி படிப்பை பாதியிலேயே கைவிட நேரிடுகிறது. அதன்பிறகு பலரால் அந்த படிப்பை தொடர முடிவதில்லை என்பதே நிதர்சனம். இனி பெண்கள் எக்காரணம் கொண்டும் கல்வியை கைவிடாமல் இருக்கும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ( UGC ) , ஒரு பயனுள்ள அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. M.Phil., Ph.D., படிக்கும் மாணவியருக்குப் பேறுகால விடுப்பு (Maternity Leave) 240 நாட்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் , பல்கலைக்கழகத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

சுற்றறிக்கை
சுற்றறிக்கை

பேறுகால விடுப்பில் உள்ளவர்களுக்கு தேர்வு கால சலுகைகள், வருகைப்பதிவேட்டில் சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்கிட ஏதுவாக உரிய விதிகளை வகுக்கவும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அறிவித்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ள பேறுகால விடுப்பு பற்றி பேராசிரியர் பர்வீன் சுல்தானாவிடம் பேசினோம், `` ஒரு பெண்ணின் வீட்டு வேலை, அலுவலக வேலை என்று எதுவாக இருந்தாலும் இவையெல்லாவற்றையும் சமநிலை செய்வதற்கு ஒரு சின்ன உதவி தேவைப்படுகிறது. அது ஒரு சமூக நீதிக்குள் வரும். அது ஒரு கடமை. அந்தப் பெண்களுக்கு ஆதரவாf எல்லா பக்கங்களிலும் யோசிக்கிற நாம். மாணவர்கள் வந்து திருமணம் வயதை கடந்த நிலையில் அவர்கள் மாணவராகவே இருக்கக்கூடிய கல்வி முறை நம்மிடம் இருக்கிறது. திருமண வயதைக் கடந்து அதாவது 23 வயதில்தான் Ph.D சேர முடியும். இன்னும் M.Phil., முடிப்பதற்கு 25 வயசு ஆகிவிடும். தற்போது நான் ஒரு வழிகாட்டியாக ( Guide ) இருக்கிறேன். தற்போது என்னிடம் 3 பேர் Ph.D., பயில்கிறார்கள்‌. ஏற்கெனவே அந்தப் பெண்கள் திருமணமாகி வேலைக்கும் செல்கிறார்கள். பயில்கின்ற மாணவிகள் பகுதி நேரத்தில் Ph.D., படிக்கிறார்கள். ஒரு மாணவி பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருக்கிறார்.மற்றொருவர் கல்லூரியில் துறை தலைவியாக இருக்கிறார். அவர்கள் கல்லூரியை, குடும்பத்தை கவனிக்க வேண்டும் கூடவே Ph.D என மூன்று பெரும் உலகத்தை ஆட்சி செய்வது போன்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் சில நேரங்களில் முழுநேரமாக Ph.D., படிக்கும் பிள்ளைகள் பேறுகாலத்தின் கண்டிப்பாக அவர்களால் அந்த ஆராய்ச்சி விவரக்குறிப்புக்கு ( Research Specifications) வந்து போக முடியாது. இந்த மாதிரியான சூழ்நிலை வரும் போது பல பிள்ளைகள் அதிலிருந்து விலகிக் கொள்கிறார்கள். நல்ல திறமையுள்ள மாணவிகள் ஆக இருப்பார்கள், ஆனால் பேறுகாலம் வரும் போது பிள்ளைகள் படிப்பினை கைவிடுகிறார்கள். ஏனெனில் தாங்கள் கொடுக்கும் அந்த ஆராய்ச்சி தகவல்கள் (Research Data ) காலம் கடந்து விடுவதால் காலாவதி ஆகிவிடுகிறது. இந்த மாதிரியான நேரங்களில் அவர்களால் தகவல் திரட்டிவிட்டு ( Data Collections) அதை எழுத முடியாமல் இருப்பர். இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் இந்த மாணவிகளுக்கு 240 நாள்கள் பேறுகால விடுப்பு அளித்திருக்கும் அரசை நிச்சயம் பாராட்ட வேண்டும். பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறவர்களைப் பார்த்து பிரார்த்தனை செய்வதா, நன்றி செலுத்துவதா, என்றே தெரியவில்லை. ஒரு வகையான ஒரு பரவசமான சூழ்நிலையில் தான் நான் இதற்கு நன்றி செலுத்துகிறேன். என் சார்பில் ஒரு வழிகாட்டியாக ( Guide) என்னுடைய வாழ்த்துக்கள்.

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

நான் Ph.D., முடிக்கும் போது என்னுடைய நன்றி உரையில் நான் இப்படி எழுதி இருப்பேன் , " என் 4 வயது மகன் எந்நாளும் என்னை மகிழ்விக்கிறான் " என்று. அப்போது நான் ஆய்வுக்கட்டுரை ( Thesis ) எழுத ஆரம்பிக்கும்போது என் மகன் கைக்குழந்தையாக இருந்தான். அதனால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு தெரியும், அந்த வயதை தான் நானும் கடந்து வந்திருக்கிறேன்.

எனக்கு கிடைக்காத ஒன்று என்னுடைய அடுத்த தலைமுறைக்கு கிடைக்கிறது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான்" என்றார் பேராசிரியர் பர்வீன் சுல்தானா.