Published:Updated:

`நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி..' - ’விகடன் வெபினாரி’ல் டாக்டர் சங்கர சரவணனுடன் உரையாடலாம்!

விகடன் கல்வி எக்ஸ்போவில் கல்வியாளர்
News
விகடன் கல்வி எக்ஸ்போவில் கல்வியாளர்

கல்லூரி காலத்தை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்துதான் அவர்களுடைய எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.

ப்ளஸ் டூ முடித்த மாணவர்கள், கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. ஆனால், கொரோனா எல்லோரையும் வீட்டுக்குள்ளாகவே முடக்கி வைத்திருக்கிறது. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

விகடன்  எக்ஸ்போ
விகடன் எக்ஸ்போ

இந்த நெருக்கடியான சூழலில் இருந்து, மாணவர்களையும், பெற்றோருக்கும் வழிகாட்ட ஆனந்த விகடன் இணைய வழியில் `மெகா டிஜிட்டல் எஜுகேஷன் எக்ஸ்போ’ ஒன்றை நடத்தவிருக்கிறது. இந்த எக்ஸ்போவை ஒட்டி, தமிழகத்தின் பிரபல கல்வியாளர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் பங்கேற்கும் வெபினாரையும் ஆனந்த விகடன் நடத்துகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
`நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி..' - ’விகடன் வெபினாரி’ல் டாக்டர் சங்கர சரவணனுடன் உரையாடலாம்!

மே 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ள இந்த வெபினாரில் எந்தப் படிப்பை தேர்வு செய்வது... எதிர்காலம் உள்ள படிப்பு எது... நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி.. இவை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு கல்வியாளர்கள் பதிலளிக்க உள்ளார்கள். மே 9-ம் தேதி கல்வியாளரும் அரசு அதிகாரியுமான சங்கர சரவணன் `கல்லூரிச் சாலை’ என்ற தலைப்பில் மாணவர்களிடமும் பெற்றோரிடமும் உரையாடுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் கல்வி எக்ஸ்போ
விகடன் கல்வி எக்ஸ்போ

``கல்லூரி காலம் என்பது ஒவ்வொரு மாணவருக்கும் முக்கியமான காலம். அந்தக் காலத்தை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்துதான் அவர்களுடைய எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.

சிலர் விரும்பிய பாடம் ஒன்றாக இருக்கலாம். ஆனால், வேறு ஒன்றில் சேர நேரலாம். சில மாணவர்களுக்கு பெற்றோர்களை விட்டு விடுதியில் தங்கி படிக்கின்ற நிலையும் ஏற்படும். இவ்வாறு புதிய இடங்களையும் மனிதர்களையும் சந்திக்க உள்ள மாணவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் எந்தெந்த விஷயங்களையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும், தங்களுக்கான பாடப்பிரிவை எப்படியெல்லாம் தேர்வு செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளையும் விரிவாகப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன்" என்கிறார் சங்கர சரவணன்.

டாக்டர் சங்கர சரவணன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவநல்லூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து முக்கிய அரசுப் பணியை எட்டிப் பிடித்தவர்.

விகடன் கல்வி எக்ஸ்போ
விகடன் கல்வி எக்ஸ்போ

முதுநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்காக, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் நடத்தும் அகில இந்திய நுழைவுத்தேர்வில் இந்திய அளவில் இரண்டாவது இடம்பெற்று, உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை மருத்துவக் கழகத்தில் கால்நடை உணவியலில் முதுநிலை பட்டப் படிப்பை படித்தவர். தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். புதிய பாடநூல்கள் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர்.

இவர் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட போட்டித்தேர்வு நூல்களை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. `கையளவு களஞ்சியம்' என்ற நூல் 23 பதிப்புகள் கண்டு 1,00,000 பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது. இந்தியக் குடிமைப் பணி பயிற்றுநராக இருபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேவையாற்றி வருகிறார். இன்று ஆட்சிப்பணியில் இருக்கும் பலர் இவருடைய மாணவர்கள். டாக்டர் சங்கர சரவணனோடு உரையாட தயாரா மாணவர்களே...! அதற்கான பங்கேற்பை கீழ் உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்

https://special.vikatan.com/vikatan-digital-educationexpo/?utm_source=TVC&utm_medium=Multi%20channel&utm_c